Editorial / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) அபிவிருத்தி செய்வதற்காக அதன் உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் PLC மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) ஒரு பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர் (BOT) ஒப்பந்தம் இன்று (30)கைச்சாத்திடப்பட்டது.
இதனூடாக கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
‘வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்’ என்ற பெயரில் புதிய கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்பிரகாரம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34 சதவீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்துக்கும் 15 சதவீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றன.
இந்த திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
6 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
29 minute ago