2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கொட்டகல கஹட்ட - ரச வாசனா முடிவு

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கொட்டகல கஹட்ட - ரச வாசனா’ வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டம், 2017 ஜுன் 22 முதல் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை இடம்பெற்று, அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வெற்றியாளர்களிடையே, 20 TVS ஸ்கூட்டி பெப் வண்டிகளைப் பகிர்ந்தளிக்கும் வைபவம், கிரான்ட் ஒறியன்டல் ஹொட்டேலில் அண்மையில் நடைபெற்றது. 

வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, இந்த ஊக்குவிப்புத் திட்டக் காலப்பகுதியில், கொட்டகல கஹட்ட ஊக்குவிப்பு வாகனங்கள், 20 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், நாடு தழுவிய ரீதியில் 112 நகரங்களைச் சென்றடைந்தன. 

‘கொட்டகல கஹட்ட’ வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டம் பற்றி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த வருடத்தில் இந்தப் போட்டித் தொடரின் போது பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுக் கொண்டனால், இரண்டாவது முறையாகவும் நாம் இதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்” என்று கூறினார். சென்ற வருடம் அடைந்து கொண்ட வெற்றியைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கோரிக்கையைக் கருத்திற் கொண்டு, இப்போட்டியை இவ்வருடமும் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. எம்மோடு தொடர்ந்து இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றியையும், கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்பது இந்த திட்டத்தின் ஒரேயொரு நோக்கமாகும். இவ்வருட போட்டியில் கணிசமான அளவு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. எமது உற்பத்திக்கு இலங்கையின் வாடிக்கையாளர்களிடையே கிடைத்து வரும் நன்மதிப்பு அதிகரித்தமையை இது வெளிப்படுத்துகிறது. எமது உயர்மட்டத் தரமே, இவ்வாறு எமது வர்த்தகப் பெயரை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்வதற்கு ஒரு பிரதான காரணமாகும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், “கொட்டகல கஹட்டவின் பயணம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுது” என்றார். “எமது வர்த்தகப் பெயர் அடைந்துள்ள மாபெரும் வெற்றி பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதைய நிலையில், கொட்டகல கஹட்ட இலங்கை சந்தையில் அறிமுகமாகி ஐந்து வருட குறுகிய காலத்தில், இலங்கையின் தேயிலைத் தொழிற்துறையில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகக் காணப்படுவது மாபெரும் சாதனையாகும்” என்றும் அவர் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .