2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கி ACH உடன் பங்காண்மை கைச்சாத்து

Freelancer   / 2025 மே 30 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கிக்கும் அவுஸ்திரேலிய உயர் கல்வி நிலையமான ACH க்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்று தேவையான நிதியை எளிதாக திரட்டக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வங்கிக்கும் ACH கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாணவர்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ACH இணைப்புப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு தமது மாணவர் கோப்புகளைத் திறந்து கல்விக் கடன்களைப் பெற வழி வகுக்கிறது.

கொமர்ஷல் வங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியைத் தொடர்ந்து கொண்டு தொழில் புரியும் மற்றும் தொழில் புரியாத மாணவர்களுக்கு, நெகிழ்வான விதிமுறைகளுடன் கூடிய கல்விக் கடன் வசதிகளை வழங்குகிறது. இந்தக் கடன் வசதிகள் நீண்ட மீளச் செலுத்தும் காலம் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வங்கியானது இந்த ஒத்துழைப்பிற்கிணங்க கடனின் மூலதனத் திருப்பிச் செலுத்துதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதல் இரண்டு வருடங்கள் வட்டியை மட்டுமே செலுத்தும் சலுகையை வழங்குகிறது. அத்துடன் கற்கை கட்டணம், ரூ. 10 மில்லியன் வரையானதாக இருக்கும்பட்சத்தில் கட்டணத்தில் 80% ஐ ஈடுசெய்யும் வகையில் கடன் வசதி வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலதிகமாக, விண்ணப்பதாரர்கள் தற்போதுள்ள வீதத்திலிருந்து 0.5% சிறப்பு வீதக் குறைப்பு, ஆவணக் கட்டணங்களில் 50% விலைக்கழிவு மற்றும் தந்தி பரிமாற்றக் கட்டணங்களில் 50% விலைக்கழிவு என்பவற்றின் மூலம் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X