Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 25 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் SME கடன் உத்தரவாத தீர்வை அறிமுகப்படுத்தவுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) கடன் மற்றும் நிதியியல் தீர்வுகளை எவ்வாறு அணுகுகின்றன என்பதை மீள வடிவமைப்பதில் ஒரு மாற்றத்தக்கதான நடவடிக்கையை எடுக்கிறது.
நாட்டின் மிகப்பாரிய தனியார் துறை வங்கியின் மற்றொரு திருப்புமுனை முயற்சியான இந்த தனிப்பயனுடைய கட்டமைக்கப்பட்ட AI தளமானது, ஒரு முன்னணி உலகளாவிய ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து முழுமையாக உருவாக்கப்பட்டதுடன் வங்கியின் உள்ளக திறன்களை உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைக்கிறது. இது கொமர்ஷல் வங்கியின் SME வர்த்தக மாதிரி மற்றும் இடர் கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது சந்தை இயக்கவியலைக் கடந்து SME நிதியுதவியை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான வங்கியின் மூலோபாய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
இந்த மைல்கல் முயற்சியானது, SME வங்கியை மீள் வரையறை செய்வதற்கான வங்கியின் மூலோபாய உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது, இது நாட்டின் SME களுக்கு மிகப்பாரிய கடன் வழங்குனர் மற்றும் இலங்கையின் சிறந்த SME வங்கியாக பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள அதன் அந்தஸ்துக்கு ஏற்றதாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்வானது மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறைகள் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி SME களின் நடத்தைத் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், தனியுரிம வழிமுறைகள் மூலம் அவர்களின் நிதியியல் கோரிக்கைகளை மதிப்பிடுவதன் மூலமும் அவர்களின் நிதியியல் தேவைகளை அடையாளம் காண உதவுகிறது.
இந்த செயல்முறைகளை தானியங்குபடுத்தி மேம்படுத்துவதன் மூலம், இந்த தளம் வங்கிக்கு மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் போட்டி விலையை வழங்க உதவுகிறது, அதே வேளை விரைவான கடன் ஒப்புதல் மற்றும் விநியோகத்தை உறுதி செய்கிறது. இந்த தரவு மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையானது, SME- க்கள் தமது வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை அணுகுவதை ஆதரிப்பதுடன் இது கடுமையான தனியுரிமை தரநிலைகளின் அடித்தளமாக உள்ளது.
இந்த முயற்சியின் நோக்கங்களாவன, SME கடன் ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துதல், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துதல் மற்றும் துறை முழுவதும் நிதியியல் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் என்பவையாகும். கொமர்ஷல் வங்கியானது தேசிய பொருளாதாரத்திற்கு SME கள் வழங்கும் முக்கிய பங்களிப்பையும், தொழில்துறையில் ESG நடைமுறைகளை உட்பொதிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, இந்த திறனை உயிர்ப்பிக்க குறிப்பிடத்தக்க முதலீட்டைச் செய்துள்ளதுடன் சந்தையில் புத்தாக்கத்திற்கான புதிய அளவுகோல்களை அமைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடானது வாடிக்கையாளர் தாக்கத்திற்கு அப்பால், சந்தை வரம்பை விரிவுபடுத்துதல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், இடர் முகாமைத்துவம் மற்றும் சொத்து தரத்தை வலுப்படுத்துதல், வள செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் ESG தேவைகளுக்கு ஏற்ப தகவமைப்புத் தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் வங்கிக்கு கணிசமான நன்மைகளை வழங்குகிறது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% காபன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
14 minute ago
28 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
49 minute ago
53 minute ago