2025 ஜூலை 23, புதன்கிழமை

கொமர்ஷல் வங்கி, சதொச மோட்டர்ஸ் இணைந்து சலுகைகள்

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக ரீதியான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் நோக்கில் கொமர்ஷல் வங்கியும் சதொச மோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளன.  


இத்திட்டத்தின் கீழ், தனது ஒட்டு மொத்த Isuzu லொறி வகைகள், cabs மற்றும் பஸ் வண்டிகளுக்கு சதொச மோட்டர்ஸ் நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஓர் இலட்சம் ரூபாய் வரையான கழிவை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் தனித்துவமான தனியார் வங்கியின் ஆதரவுடன் கூடிய இந்த ஊக்குவிப்பின் மூலம், மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகைகள் வழங்கப்படும். இவற்றுக்கான குத்தகை வாடகையும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும்.  

இந்த விசேட குத்தகை, வாடகைக்கு அப்பால், விற்பனை விலையில் கழிவு, வாகனத்தை கொள்வனவு செய்கின்றபோது கட்டணம் அற்ற ஆறு சேவை வசதிகள், சதொச மோட்டர்ஸ் பணிப்பிரிவில் சேவைகளை பெறும் பட்சத்தில் 100,000 கிலோ மீற்றருக்கான என்ஜின் மற்றும் கியர் பொக்ஸ் உத்தரவாதம், இரண்டு வருட அல்லது 40,000 கிலோமீற்றர் வாகனத்துக்கான உத்தரவாதம், கொமர்ஷல் வங்கியின் நாடு முழுவதும் உள்ள கிளை வலையமைப்பின் ஊடான துரித குத்தகைச் சேவைகள் என்பனவும் வழங்கப்படும்.  
இந்த ஊக்குவிப்புத் திட்டம் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கி சேவையின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி சன்றா வெல்கம, “கொமர்ஷல் வங்கி நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SMEs) எப்போதும் ஆதரவாக இருந்து வருகின்றது. இந்த ஊக்குவிப்பானது அந்தப் பிரிவினருக்கான எமது ஆதரவின் இன்னொரு வெளிப்பாடாகும். ஒருவர் தனது வர்த்தகத்துக்கான முதலாவது வாகனத்தைக் கொள்வனவு செய்கின்ற போது அல்லது இருக்கின்ற வாகன வசதிகளை தரம் உயர்த்துகின்ற போது, இந்த ஊக்குவிப்புக் காலம் கொமர்ஷல் வங்கியின் ஆதரவுடன் Isuzu வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய மிகவும் சிறந்த தருணமாக உள்ளது” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .