Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 11 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி மற்றும் செனோக் டிரேட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட நியாயமான லீசிங் தெரிவுகள் மூலம் கட்டிட நிர்மாணத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய உபகரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் பொதியின் கீழ், செனோக்கிலிருந்து JCB மற்றும் Kobelco வர்த்தகநாமங்களைக் கொண்ட நிர்மாணத்துறைக்கான சாதனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு சலுகைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன.
இதனால் வழங்கப்படும் நன்மைகளில் சிறப்பு விலைகள் மற்றும் குறைந்த வட்டி வீதங்கள், கவர்ச்சிகரமான மற்றும் நியாயமான வாடகைகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டங்கள் மற்றும் 50, 250 மற்றும் 500 மணிநேரங்களில் முதல் மூன்று சேவைகளுக்கு இலவசக்கட்டணம் ஆகியவை அடங்கும்.
செனோக் குழுமத்தின் தடமானது நிர்மாணத்துறைக்கான இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள், வர்த்தக வாகனங்கள், தானியங்கி வாகனங்கள், தேயிலை, ஓய்வு, முன் வார்ப்பு திட்டங்கள், புத்தாக்க எரிசக்தி, விஷேட திட்டங்கள் மற்றும் வாழ்க்கைத் துறை என, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு வர்த்தகத் துறைகளில் பரந்துள்ளது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% காபன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago