2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

கொமர்ஷல் வங்கியினால் சிறுவர் ஓவியர்களுக்கு விருது

S.Sekar   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் அருணலு சித்தம் ஓவியப் போட்டியின் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டு பணம் மற்றும் சான்றிதழ்களை பரிசாக பெற்றுள்ளார். ஐந்து வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் நான்கு பிரிவுகளில் இருந்து தெரிவான முன்னணி வெற்றியாளர்களில் 12 இளம் ஓவியர்கள் வங்கியால் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட வைபவத்தில் தமக்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

'அருணலு சித்தம் சிறுவர் ஓவியப் போட்டி 2021' எனும் தொனிப் பொருளில் இந்தப் போட்டியை கொமர்ஷல் வங்கி நடத்தியது. இது இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியாகும். கடந்தாண்டு ஒக்டோபரில் 4 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 'எமது வாழ்வுமுறை' (கனிஷ்ட பிரிவு) 'இயற்கையின் கொடைகள்' (சிரேஷ்ட பிரிவு) என்பனவே கொடுக்கப்பட்ட தலைப்புக்கள். ஓவியங்களை அனுப்புவதற்காக கொடுக்கப்பட்ட கால எல்லை 2021 நவம்பர் 25 வரை. முன் பள்ளி (4 முதல் 5 வயது) ஆரம்ப பிரிவு (6 முதல்7 வயது) பின் ஆரம்பம் (8 முதல் 10 வயது) கனிஷ்ட பிரிவு (11 முதல் 13 வயது) சிரேஷ்ட பிரிவு (14 முதல் 16 வயது) என்பனவே போட்டிக்கான வயதுப் பிரிவுகளாகும்.

நான்கு சிரேஷ்ட வயதுப் பிரிவுகளில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றவர்களே பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். முறையே ரூ. 1 லட்சம், ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட முன்பள்ளிப் பிரிவில் வெற்றி பெற்ற 25 இளம் கலைஞர்களும் தலா பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் என்பனவற்றையும் இன்னும் 50 வெற்றியாளர்கள் தமக்கான ஆறுதல் பரிசாக சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்வர். மேலதிகமாக ஒவ்வொரு வயதுப் பிரிவையும் சேர்ந்த 25 போட்டியாளர்கள் பத்தாயிரம் ரூபா பணப்பரிசையும், ஒவ்வொரு பிரிவையும் சேர்ந்த 50 போட்டியாளர்கள் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்வர் என வங்கி அறிவித்துள்ளது.

ஏனையவர்கள் தமக்குரிய சான்றிதழ்களை அவர்களுக்கு அருகில் உள்ள கொமர்ஷல் வங்கி கிளையில் இருந்து பெற்றுக் கொள்வர். மற்றவர்களுக்கு அவர்கள் வென்ற தொகை அவர்களது அருணலு கணக்கில் வைப்பிலிடப்படும். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் மத்தியில் மொத்தம் 25 லட்சம் ரூபா பரிசாகப் பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.

வெற்றியாளர்களைத் தெரிவு செய்த நடுவர் குழு பேராசிரியர் ஸ்ரீபால மாலிம்பொட கற்புல அரங்கற் கலை பல்கலைக்கழகத்தின் (VPA) ஓய்வு பெற்ற முன்னாள் பீடாதிபதி மற்றும் இலங்கை அரச கலைப்பேரவையின் உறுப்பினர், திருமதி தீபா அலஹக்கோன் புத்தாக்க ஆலோசனைப் பணிப்பாளர் (விளம்பரம்) மற்றும் வருகை தரும் விரிவுரையாளர் (VPA), லால் ஜயசேகர சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் VPA அச்சுக்கலைப் பிரிவு திணைக்களத் தலைவர், சஞ்சய செனவிரட்ண தொழில்சார் ஓவியர் மற்றும் VPA பட்டதாரி, திருமதி இனோக்க எதிரிசிங்க வடமேல் றோயல் கல்லூரியின் ஓவிய ஆசிரியை மற்றும் VPA பட்டதாரி ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .