2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் குறுங்கால நிலையான வைப்புக்களுக்கு அதிக வட்டி

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுகிய கால வைப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், வங்கியின் வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் ஒப்பிடமுடியாத மற்றும் பாதுகாப்பான வருவாயை வழங்குவதற்காகவும், கொமர்ஷல் வங்கி, வருடாந்தம் 22% வரையிலான உயர் வட்டி வீதங்களுடன்; நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் 100 நாட்கள், 200 நாட்கள் மற்றும் 300 நாட்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 மில்லியன் வைப்புத் தொகையுடன் நிலையான வைப்புக் கணக்குகளைத் தொடங்கி ஆண்டுக்கு முறையே 20%> 21% மற்றும் 22% வருமானத்தைப் பெறலாம்.

வங்கியின் தனிப்பட்ட மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் இந்த சமீபத்திய குறுகிய கால நிலையான வைப்புத் திட்டத்திலிருந்து பயனடைவார்கள், இது ஒரு முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது மற்றும் முதிர்வுக் காலத்திற்குப் பிறகு புதுப்பிக்க முடியாதது என்று வங்கி தெரிவித்துள்ளது. தனிப்பட்ட வாடிக்கையாளர்களும் கூட்டாக இந்தக் கணக்குகளைத் திறந்து பயனாளியை பரிந்துரைக்கலாம்.

இந்த புதிய நிலையான வைப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ் பிரபாகர் கூறியதாவது: 'வட்டி வீதங்கள் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான விருப்பங்களைத் தேடுகின்றனர், ஆனால் அத்தகைய முதலீடுகளின் பாதுகாப்பும் மிக முக்கியமானது, குறிப்பாக தற்போதைய சூழலில். கொமர்ஷல் வங்கியானது நாட்டின் மிகப் பெரிய மற்றும் அதிக இலாபம் ஈட்டும் தனியார் துறை வங்கியின் பலத்தையும் ஸ்திரத்தன்மையையும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நம்பிக்கையையும், அதிக போட்டித்தன்மை கொண்ட வருமான விகிதத்துடன் வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .