Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
S.Sekar / 2022 ஜூன் 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ‘உதார’ சிரேஷ்ட பிரஜைகள் கணக்கை புதிய பண்புகளுடனும், விஷேட வட்டி வீதத்துடனும் மீள் அறிமுகம் செய்துள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களின் தளத்தை விஸ்தரிக்கும் வகையிலும், இந்த வாடிக்கையாளர் பிரிவுக்கு மேலும் வெகுமதிகளை வழங்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷஉதார| சேமிப்புக் கணக்கொன்றை திறப்பதற்காகத் தேவைப்படும் ஆகக் குறைந்த தொகையை வங்கி ஐயாயிரம் ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாவாகக் குறைத்துள்ளது. உதார நிரந்தர வைப்பும் பத்தாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையில் தொடங்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய கணக்குப் புத்தகத்துக்கு மேலதிகமாக சேமிப்புக் கணக்கு வங்கிக் கூற்றும் இந்தப் பிரிவுக்கு வழங்கப்படும். இலத்திரனியல் பாஸ்புக், இலத்திரனியல் வங்கிக் கூற்று வசதிகள் என்பனவும் இலவசமாக வழங்கப்படும் என வங்கி மேலும் அறிவித்துள்ளது.
உதார சேமிப்புக் கணக்கு மற்றும் நிரந்தர வைப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் விஷேட வட்டி வீதம் ஒன்றையும் அனுபவிக்கவுள்ளனர். இது வழமையான சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்புக் கணக்குகளின் வட்டி வீதத்தைவிட அதிகமாகும். மேலும் உதார வாடிக்கையாளர்கள் எந்தவொரு கொமர்ஷல் வங்கிக் கிளையிலும் முன்னுரிமை அடிப்படையிலான சேவைகளையும் பெற்றுக் கொள்வர். தமது பாஸ்புக், டெபிட் கார்ட், விஷேட அடையாள அட்டையைக் காட்டி இந்த முன்னுரிமை சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள தனது றீட் அவனியு கிளையில் உள்ள மருந்து விற்பனை நிலையத்தில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் உதார கணக்கு வாடிக்கையாளர்களுக்கு கழிவுகள் வழங்கப்படும் எனவும், அதேபோல் தனது பங்குடமை ஆஸ்பத்திரிகள் மூலம் உதார வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குரிய பகுதிகளில் பிரத்தியேகமான கழிவுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர சிரேஷ்ட பிரஜைகளுக்கான உதார கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் கழிவுகளை உள்ளடக்கிய விஷேட டெபிட் கார்ட் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும். கொம்பாங்க் டிஜிட்டல், மொபைல்; வங்கிச் சேவை, SMS அறிவித்தல்கள் எனபனவும் பதிவுக் கட்டணங்கள் இன்றியும், முதல் வருட வங்கிக் கட்டணங்கள் இன்றியும் வழங்கப்படும் என வங்கி மேலும் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago