S.Sekar / 2021 பெப்ரவரி 12 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் திருகோணமலைக் கிளை, புதிய முகவரிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது. இல. 420 நீதிமன்ற வீதி, திருகோணமலை என்ற முகவரியில் இந்தக் கிளை அமைந்துள்ளது.
நவீன வசதிகளுடன், சூழலுக்கு பாதுகாப்பான கட்டடத்திற்கு இந்தக் கிளை இடம்மாற்றப்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் இயற்கை ஒளியை உச்ச அளவில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டடம், சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வளிச் சீராக்கிக் கட்டமைப்புகளையும் (air conditioning systems) கொண்டுள்ளதோடு, கிளையின் பசுமை இயல்புக்கு இவை மெருகூட்டுகின்றன. இவ்விடத்துக்கு ஏற்றவாறு, உத்தியோகபூர்வ விஜயங்களுக்காக அல்லது விடுமுறைக் காலங்களின்போது வங்கி அதிகாரிகள் பயன்படுத்துவதற்கெனத் தனியான விடுமுறைக் கால பங்களா ஒன்றும் இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பதற்காகப் புதிய கட்டடத்தில் தானியங்கி வங்கி இயந்திரம் ஒன்று (ஏ.டி.எம்), பண வைப்பு மற்றும் மீளப்பெறும் இயந்திரம் ஒன்று (சி.ஆர்.எம்), e-Slips காசோலைச் சேகரிப்பு வசதி என்பன அமைந்து, ஆண்டின் 365 நாட்களும் எந்நேரமும் பணத்தை மீளப்பெறவும் வைப்பிலிடவும் ஏற்ற வசதிகளை இக்கிளை வழங்குகிறது.
16 minute ago
23 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
27 minute ago
1 hours ago