2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு ‘AAA’ கடன் மதிப்பீடு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பங்களாதேஷ் கொமர்ஷல் வங்கி, கடன் மதிப்பீடு தகவல் மற்றும் சேவைகள் நிறுவனத்திடமிருந்து [Credit Rating Information and Services Ltd (CRISL)] தொடர்ச்சியாக 14 ஆவது வருடமாக 2024 ஆம் ஆண்டிற்கான 'AAA' (Triple A) நீண்ட கால கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பங்களாதேஷில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

ஜூன் 2025 வரை செல்லுபடியாகும், சமீபத்திய கடன் மதிப்பீடானது தொடர்புடைய அளவு மற்றும் தரமான காரணிகளுடன் வங்கியின் செயல்பாடு மற்றும் நிதிபெறுபேறுகள் தொடர்பான ஆய்வின் விளைவாகும் என வங்கி தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ், கொமர்ஷல் வங்கியின் இந்தச் சாதனைக்கு வாழ்த்துத் தெரிவித்து கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றதிகாரி சனத் மனதுங்க கூறுகையில் —'AAA' (Triple A) தரவரிசையை தொடர்ச்சியாக 14 வருடங்களாகப் பெறுவது பங்களாதேஷில் உள்ள ஒரு வங்கிக்கு விதிவிலக்கான அரிய சாதனையாகும். இது சிறந்து விளங்குவதற்கான ஒருமித்த அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பான சேவை மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள தலைமைக் குழு மற்றும் ஊழியர்களின் இணையற்ற சேவைத் தரங்களை வெளிப்படுத்துகிறது. பங்களாதேஷ், கொமர்ஷல் வங்கியானது கொமர்ஷல் வங்கி குழுமத்தின் பெரும் சொத்தாக திகழ்கிறது.” என்றார்.

கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் நடவடிக்கைகளின் பிரதம நிறைவேற்று அதிகாரி நஜித் மீவனகே தெரிவிக்கையில் “பங்களாதேஷில் எங்களது செயல்திறன் இலங்கை, கொமர்ஷல் வங்கியை போன்ற அதே நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகள் மற்றும் நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உந்தப்படுகிறது. டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உட்பட பெருநிறுவன மற்றும் சில்லறை வங்கியியல் ஆகிய இரண்டிலும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தை வழங்குவதை உறுதிசெய்கிறோம். பங்களாதேஷில் ஒரு தரநிலை தாங்கியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது எங்களின் ‘AAA’ மதிப்பீட்டின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X