Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 31 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பாங்க் ஒன் வீல்ஸ்’ (சக்கரங்களில் வங்கி) என மக்கள் புரிந்து கொள்ளத்தக்க தொனிப் பொருளில் கொமர்ஷல் வங்கி நடமாடும் வங்கிச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
நகர எல்லைகளுக்கு வெளியே வாழும் மக்களுக்கு வங்கியின் கரும பீடம் ஒன்றில் கிடைக்கும் சேவைகளை வழங்கத் தக்கதாக வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்ட வாகனம் ஒன்று இதற்கென பயன்படுத்தப்படுகின்றது.
பண வைப்பு மற்றும் மீளப் பெறுகை என சகலதுக்கும் வசதியான பண மீள்சுழற்சி இயந்திரம் (CRM) ஒன்றும் இதில் உள்ளது. வங்கி கருமபீடம் ஒன்றும் அதில் உள்ளது. கணக்குகள் திறத்தல், கடன் விண்ணப்பங்களை ஏற்றல், பாவனைக் கட்டணங்கள் உட்பட மற்றும் கொடுப்பனவுகள் என்பனவற்றையும் செலுத்த முடியும்.
சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு சேவைகள் என்பனவற்றையும் இந்தப் பிரிவு மேற்கொள்ளுகின்றது.
கிழமை நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை செயற்படும் இந்தப் பிரிவு, ஏற்கெனவே திட்டமிட்டபடி அடையாளம் காணப்பட்ட இடங்களுக்குச் செல்லும்.
குறிப்பிட்ட காலக்கிரமத்தின் அடிப்படையில் இந்த இடங்களுக்குச் சென்று, நடமாடும் வங்கிச் சேவைகளை வழங்கும். வாடிக்கையாளர் நன்மை கருதி அந்தப் பிரிவு செல்லும் இடங்கள் கால நேரம் என்பன பற்றிய விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
4 minute ago
39 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
41 minute ago