2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொழும்பு - சர்வதேச புத்தக சந்தை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சர்வதேச புத்தக சந்தை திருவிழா (CIBF) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 20ஆவது வருடமாக தலைநகரில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்தப் புத்தகச் சந்தை கண்காட்சி திருவிழாவில் 450க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களுள் 40 காட்சியாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமது பங்கேற்றலை உறுதி செய்துள்ளதன் மூலம் நாட்டில் இடம்பெறும் சகல பிரிவுகளையும் சார்ந்த வருடாந்த கண்காட்சிகளுள் இதுவே பிரமாண்டமானதாக அமையவுள்ளது.

BMICH வளாகத்தில் தினசரி காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்தக் கண்காட்சி திறந்திருக்கும். இதனோடு இணைந்ததாக கல்வி மற்றும் தொழிற்சார் வழிகாட்டி கண்காட்சி ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதில் 30 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நூல் வெளியீட்டாளர்கள், இறக்குமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என பல பிரிவினர் இதில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் காகிதாதி விற்பனைப் பிரிவினரும் இதில் பங்கேற்பர். இவ்வருட கண்காட்சியின் போதும் வருடாந்தம் வழங்கப்படும் 20 வீத கழிவை அவர்கள் வழங்குவர். மண்டபம் N இல் அமையவுள்ள பேரம்பேசல் விற்பனைப் பிரிவில் 80 வீத கழிவு வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சீருடையில் வருகை தரும் ஆயுதப் படையினருக்கும் மதகுருமாருக்கும் இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசமாகும். ஏனையவர்களிடம் இருந்து 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும். அது நாடு முழுவதும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கும் ‘தரு தெரிய’ நிதியத்தில் வைப்பில் இடப்படும். 

இந்தத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் தெரிவு செய்யப்படும் ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக படிப்பு முடியும் வரை புலமைப் பரிசில் வழங்கப்படும். கடந்த 11 வருடங்களாக ‘தரு தெரிய’ திட்டத்தின் மூலம் பல மாணவர்களுக்கு தேவைக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .