Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அங்கர் தயாரிப்புகளை வழங்கும் ஃபொன்டெரா பிராண்ட்ஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நிறுவப்பட்ட கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு ரூ.10 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை மனிதாபிமான பணிகளுக்கு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அயராது உழைக்கும் அதிகாரிகளின் தேவைகளுக்கு உதவும்.
ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா மற்றும் இந்திய உப கண்டத்துக்கான முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை இந்த நிலைமையைக் கடக்கிறதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு, சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் முற்படையினரது வீர முயற்சிகளுக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் முதன்மை கவனம் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்கிறதே” என்றார்.
ஃபொன்டெரா அதன் உள்ளூர் பால் உழவர்களின் வலையமைப்பிலிருந்து தொடர்ந்து பால் சேகரித்து வருவதுடன் அது மூலம் அவர்களுக்கு இந்த நிச்சயமற்ற காலங்களில் உத்தரவாதமான வருமானத்தை உறுதிப்படுத்துகிறது. அவ்வாறே, உழவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது உட்பட பால் சேகரிப்பு நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிறுவனம் பல அமைப்புகளை வடிவமைத்துள்ளது.
“இது போன்ற கடினமான காலங்களில், மிக முக்கியமானது என்னவென்றால், கூட்டு மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றிணைகிறோம் என்பதே. பாலோடு இணைந்த ஒரு நிறுவனமென்ற வகையில், எங்கள் உழவர் வலையமைப்பின் வாழ்வாதாரங்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம்” என்று சேதி கூறினார்.
மேலும் அங்கர் மூலம், நிறுவனம் மனிதாபிமான முன்முயற்சிகளான மனுசத் தெரன மற்றும் ஹிரு சஹன யாத்ரா ஆகியவற்றை ஆதரித்துள்ளது, அவை உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய உதவி தேவைப்படும் பரந்த கிராமப்புற சமூகங்களை சென்றடைகின்றன. இதற்கிடையில், ஃபொன்டெரா குழுக்கள் மருத்துவமனைகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான பொருள்களை விநியோகித்துள்ளன. அவ்வாறே நாடு முழுவதுமுள்ள விநியோக வலையமைப்புகளுடன் இணைந்து உதவி தேவைப்படும் சமூகங்களுக்கு துணைபுரிகின்றன.
நிதி உதவி மற்றும் தயாரிப்பு நன்கொடைகள் என மொத்தமாக ரூ.12 மில்லியன் இன்றுவரை இந்த முயற்சிகளை நோக்கி வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளை பெற்று பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கியவாறு, பால் மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிறுவனம் நிறைவேற்றுகிறது. மேலும் அதன் பால் பொருட்களுக்கான பொது அணுகலை விரிவுபடுத்துவதற்காக ஆன்லைன் மற்றும் வெவ்வேறு விநியோக சேவைகளை ஆராய்கிறது.
இப்போது தளத்தில் அத்தியாவசிய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களின் குழுவுடன் மாத்திரம் செயல்படுகிற நிறுவனம், அதன் சகல நடவடிக்கைகளிலும் தனது ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஃபொன்டெரா இந்த சுகாதார நெருக்கடியின் போது, அதன் குழு மற்றும் கூட்டாளர்களின் சார்பாக விநியோகச் சங்கிலி முழுவதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை உறுதி செய்ய, இதுவரை ரூ. 9 மில்லியன் முதலீடு செய்துள்ளது.
“அவர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கம், தலைமை மற்றும் மனிதநேயத்திற்காக எங்கள் அணிகளை பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் தொடர்ந்தும் தேசத்திற்கு சேவை செய்கிறோம்” என்று சேதி மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago