2025 ஜூலை 26, சனிக்கிழமை

சிறந்த இணைய வங்கி சேவை வழங்குநராக கொமர்ஷல் வங்கி தெரிவு

Gavitha   / 2017 மார்ச் 07 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த இணையத்தள வங்கிச் சேவை வழங்கும் வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் கீர்த்திமிக்க குளோபல் பாங்கிங் அன்ட் பினான்ஸ் ரிவியு இந்தத் தெரிவை மேற்கொண்டுள்ளது.  

உலக நிதி சமூகத்தினரிடையே நிபுணத்துவம் மற்றும் ஆற்றல் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சகல அளவுகளிலுமான கம்பனிகளையும் அங்கிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த விருது, இணைய வழி வங்கி மேடையில் கொமர்ஷல் வங்கியின் கண்டு பிடிப்பு மற்றும் ஆற்றல் என்பனவற்றின் அதி உயர் தரத்தை அங்கிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.  

“பல்வகைத் தன்மையை விஸ்தரித்தல் மற்றும் எமது இணைய வழி வங்கிச் சேவையை அடையச் செய்தல் என்பன கடந்த இரண்டாண்டு காலமாக கொமர்ஷல் வங்கி கவனம் செலுத்தி வந்த முக்கிய விடயங்களாகும்” என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் கூறினார். “எனவே சர்வதேச கீர்த்திமிக்க இந்த விருது எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக நிதித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் நடுவே கண்டு பிடிப்பு, சாதனை, மூலோபாயம், முன்னேற்றம் தாக்கம் மிக்க மாற்றங்கள் என்பனவற்றை அங்கிகரிப்பதாக அமைந்துள்ளது”.  

கொமர்ஷல் வங்கியின் இணைய வங்கி மேடை பல்வேறு விதமான சேவைகளை வழங்குகின்றது. கணக்குகளுக்கிடையே எட்டு பிரதான நாணயங்கள் மூலமான நிதி பரிமாற்றம், ஆறு பிரதான நாணயங்கள் மூலம் நாடுகளுக்கிடையிலான வாரம் முழுவதும் 24 மணிநேர பணப்பரிமாற்றம், நடைமுறை கணக்கு, சேமிப்பு, முதலீட்டு கடன் மற்றும் கடன் அட்டைகள் பற்றிய மீதிகளையும் கணக்கு விவரங்களையும் பெற்றுக் கொள்ளல், சொந்தக் கணக்குகளுக்கிடையே நிதிப் பரிமாற்றம், கொமர்ஷல் வங்கி கணக்கு வைத்துள்ள ஏனைய மூன்றாம் தரப்புக்களைப் பதிவு செய்தல், CEFT வலைதளத்தில் வாரம் ஏழு நாளும் 24 மணிநேரம் இலங்கையில் உள்ள எந்தவொரு வங்கிக்குமான பணப்பரிமாற்றம், வங்கியில் உள்ள பணத்தைப் பாவிக்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் மூலமான கொடுப்பனவுகள் மற்றும் நிதி மாற்றங்கள், விமான பயண இணைய வழி கொடுப்பனவுகள், நிலையான வைப்புக்கள், தனிப்பட்ட கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் என்பனவற்றுக்கான விண்ணப்பங்கள், திறைசேரி உண்டியல்களில் முதலீடு, பங்கு வர்த்தகத்துக்கான கொடுப்பனவுகள் என பல சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X