2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

செலிங்கோ லைஃப்பின் மாத வருமானம் ரூ. 11 பில்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃப்பின் மொத்த வருமானம் 2016 ஜூன் 30இல் முடிவடைந்த 6 மாத காலத்தில் 14% அதிகரித்து 11.028 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இது ஒரு துரித வளர்ச்சியாகும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட முதல் ஆறு மாத காலத்தில் மொத்த சந்தா வளர்ச்சி 7.173 பில்லியன் ரூபாவாகும். 2015 இன் முதல் ஆறு மாத காலத்தோடு ஒப்பிடுகையில் இது 12% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று கம்பனி அறிவித்துள்ளது.

முதலீட்டு வருமானமும் 18.2மூ ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்து 3.855 பில்லியன் ரூபாயை வருமானமாகப் பதிவு செய்துள்ளது. செலிங்கோ லைஃப்பின் முதலீட்டு வரிசையை இது 72.792 பில்லியன்களாகப் பதிவு செய்துள்ளது. இதுவும் கடந்த 12 மாதகாலத்தில் 11.568 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

'ஆயுள் காப்புறுதிகளை விற்பனை செய்வதென்பது தொடர்ந்தும் சிரமமான ஒரு விடயமாக இருந்து வருகின்றது. ஆனால் எமது உறுதியான அடிப்படைகளும், கடந்த 12 வருடங்களாக நாம் கட்டிக் காத்து வரும் சந்தை தலைவர் என்ற மிக உறுதியான நிலையும் தொடர்ந்து எம்மை மிகச் சிறந்த நிலையில் வைத்து வருகின்றது' என்று செலிங்கோ லை‡ப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் தெரிவித்தார். 'கம்பனி கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை விசுவாசம் என்பனவற்றை பிரதிபலிப்பதாகவே சந்தையில் எமது தலைமைத்துவம் அமைந்துள்ளது. குறிப்பாக அதன் நிதி உறுதிப்பாடு, வாக்குறுதிகளை நிறைவேற்றல், காப்புறுதிதாரர்களுடனான அளப்பரிய ஈடுபாடு என்பன இதற்கு பிரதான காரணங்களாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

மீளாய்வுக்கு உட்பட்ட இந்த ஆறு மாத காலத்தில் செலிங்கோ லைஃப் 3.284 பில்லின்களை உரிமை கோரல் கொடுப்பனவாகச் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியோடு ஒப்பிடுகையில் இது 18% அதிகரிப்பாகும். இதே காலப்பகுதயில் கம்பனியின் மொத்த சொத்து 7.7% அதிகரித்து ரூ. 86.4 பில்லியனாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X