2025 ஜூலை 30, புதன்கிழமை

செலான் வங்கிக்கு CMO ஆசிய விருது

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தள மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில், இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் முன்னணி வகிக்கும் செலான் வங்கி, அதன் டிஜிட்டல் இருப்பைப் பாராட்டி பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடமும் அதன் விருதுப் பட்டியலில் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான CMO ஆசியா விருதுகளின் போது இரு தங்கம் மற்றும் இரு சிறப்பு விருதுகளை இணைத்துக் கொண்டது.  

செலான் வங்கி, அதன் தனித்துவ முறையிலான 24x7, உடனடி தீர்வுகளை வழங்கும் டிஜிட்டல் சார் வாடிக்கையாளர் சேவைத்தளங்களுக்காகத் தங்க விருதை பெற்றுக்கொண்டது.​   Facebook  இன் சிறந்த பயன்பாட்டுக்காக, வங்கியின் Facebook பக்கம் தங்கத்தைப் பெற்றுக்கொண்டது. சமூகம்சார் உறவை வளர்க்கும் வங்கியின் fb பக்கம் அதன் வாடிக்கையாளர்களுடன், நெருங்கிய உறவைப் பேணி வருகிறது. www.facebook.com/SeylanBankd ஊடாக இயங்கும் Facebook பக்கம் சுவாரஷ்யமான உள்ளடக்கம், இணைந்து செயற்படக்கூடிய apps மற்றும் gamification, சேவைகள் தொடர்பான தகவல்கள், சிறப்பு ஊக்குவிப்புக்கள் மற்றும்  ரசிகர்களுடனான உடனடித் தொடர்பு ஆகிய 6 தூண்களின் கீழ் செயற்படுகிறது. இப்பக்கம் 476,000 இற்கும் மேற்பட்ட  ரசிகர்களைக் கொண்டுள்ளதுடன் ஏனைய சமூக வலைத்தளங்களான Instagram, Twitter, LinkedIn மற்றும் Snapchat ஆகியவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.  

வங்கி சிறந்த இணையத்தளம் மற்றும் சந்தைப்படுத்தலில் சமூக வலைத்தளத்தின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றுக்காகச் சிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டது. அண்மையில் மீள் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம் வாடிக்கையாளரின் வசதி கருதி online calculator, online real time chat, செலான் டிக்கிரியில் அதன் அடுத்த பரிசு என்ன என்பதைக் கண்டறியும் gift calculator கணக்கை ஆரம்பிக்கும் வசதி மற்றும் வங்கியின் சேவைகள் தொடர்பான தொடர்ச்சியான மேம்படுத்தல் மூலம் வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுகிறது. 

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர், திலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களின் தேவை கருதி டிஜிட்டல் தளத்தில் எமது பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணச் செயற்படும் எமது குழுவின் புத்தாக்கத்துக்கு, கிடைத்த அங்கிகாரத்தை எண்ணி பெருமகிழ்ச்சியடைகிறோம். நாம் தொடர்ந்து எமது வாடிக்கையாளர்களுக்கு, பெறுமதி சேர்க்கவுள்ளதோடு, எமது உண்மையான வெற்றி வங்கிச் சேவைகளை சௌகரியமாகப் பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியளிப்பது ஆகும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .