Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 26 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி. யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அனுசரணையில் ஜி ஐ.இசட் நிறுவன நிதி உதவியின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல், உற்பத்திகளை வாங்குவோர் மற்றும் விநியோகிப்போர் இடையிலான இணைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது, சிறு தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு, உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல், வெற்றிகரமான வர்த்தக சமூகம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு, தொழில், வர்த்தக அறிவு, சந்தைப்படுத்தல் திறமை, ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை இனங்காண்பது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் டானி கொன்ஸ்ரரைன், தேசிய தொழில்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர், மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வளவாளராக சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வியாபார மேம்பாட்டு வளவாளர் எஸ்.ஜெயபாலன் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினார்.
ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் போட்டித்தன்மையான வியாபார அணுகுமுறைக்கு ஏற்ற நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தல் திட்டத்தின் கீழ், இந்தச் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இவ்வருடம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago