2025 மே 17, சனிக்கிழமை

சந்தைப்படுத்தல், தொடர்பாடல்கள் துறைகளின் பொருளாதார முக்கியத்துவத்தை ஆராய Ernst & Young நியமனம்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பாடல் துறை ஆகியவை, இலங்கையின் பொருளாதாரத்தில் வகித்துவரும் பங்களிப்புக் குறித்து, விரிவான ஆய்வை மேற்கொள்ள Ernst and Young Sri Lanka (EYSL) ஐ நியமித்துள்ளதாகச் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் கூட்டுச் சமூகம் (MarCom Collective) அறிவித்துள்ளது.

கூட்டுச் சமூகம் என்பது, கொவிட்-19 இனால் ஏற்பட்ட நிலைகுலைவின் தாக்கத்தைத் தொடர்ந்து, ஒன்றிணைந்த சந்தைப்படுத்தல், விளம்பரத் துறையைச் சேர்ந்த சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஆகும்.

இந்தத் துறையானது விளம்பரம், சந்தை ஆராய்ச்சி, நிகழ்வு தயாரிப்புகள், புகைப்படம் எடுத்தல், வீடியோ, ஓடியோ தயாரிப்புகள், ஊடகத் திட்டமிடல், டிஜிட்டல், வெகுசனத் தொடர்புகள், வெளிப்புற விளம்பரம், தொலை / ஒலிபரப்பு ஊடகங்கள் (தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, இணைய ஊடகம்), விளம்பரச் செயற்பாடுகள், அச்சிடுதல், பொதியிடுதல் உள்ளிட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடலுடன் தொடர்புபட்ட பல்வேறு வகையான வர்த்தகச் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விளம்பரப்படுத்தல், விளம்பர ஊக்குவிப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட அனைத்து வர்த்தக ஸ்தாபனங்கள் தொடர்பில், சந்தைப்படுத்தல் தொடர்பாடல் கூட்டுச் சமூகம், ஓர் ஆரம்பக் கணக்கெடுப்பை நடத்தியதுடன், 12 துறைகள் மத்தியில் 659 ஸ்தாபனங்களிடமிருந்து இந்தக் கணக்கெடுப்புத் தொடர்பான பதில்களைப் பெற்றிருந்தது. இந்த மாதிரியானது, தொழிற்றுறையின் உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் இது ஒட்டுமொத்த தொழிற்றுறையில் சுமார் 50% முதல் 60% வரையானதாக இருக்கும் என்றும் இந்தக் கூட்டுச் சமூகம் நம்புகிறது. இந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மிகவும் முக்கியமானது என்ற வகையில், அவசரமாக மீட்டெடுக்க வேண்டிய இத்தொழிற்றுறை குறித்த ஆழமான தெளிவைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஆய்வை முன்னெடுக்கும் பணியை அது EYSL இடம் ஒப்படைத்திருந்தது.

எட்டு வார கால விரிவான ஆய்வைத் தொடர்ந்து, தொழிற்றுறையை வலுப்படுத்த, ஒரு திட்டத்தை உருவாக்க, சந்தைப்படுத்தல் தொடர்பாடல் சமூகத்துடன் இணைந்து EYSL செயற்படுவதுடன், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கக்கூடிய வழிமுறைகளையும் இனங்காணும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .