Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பத் வங்கி குழுமத்தின் முதல் அரையாண்டுக்கான வரிக்கு முன்னரான இலாபம் 28.2% வளர்ச்சியுடன் ரூ. 10.3 பில்லியனைக் கடந்துள்ளதுடன், இதே காலப்பகுதியில் ரூ. 9.9 பில்லியன் என்ற வரிக்கு முன்னரான இலாபத்தொகையை சம்பத் வங்கி பதிவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இது 28.1% என்ற ஆண்டு வளர்ச்சியாகும். 2018 முதல் அரையாண்டில் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபமும் ரூ. 6.8 பில்லியன் என்ற தொகையை அடையப்பெற்று 19.9% இனால் வளர்ச்சி கண்டுள்ளது. சம்பத் குழுமமும் 20.2% வளர்ச்சியுடனான வரிக்கு பின்னரான இலாபத்தொகையை பதிவாக்கியுள்ளது.
வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 71% ஐ பிரதிநிதித்துவப்படுத்தியவாறு, அதன் பிரதான வருமான மூலமாகக் காணப்படுகின்ற நிகர வட்டி வருமானம் (Net Interest Income - NII), மீளாய்வு செய்யப்படும் காலப்பகுதியில் ரூ. 4.5 பில்லியன் (34.3%) அதிகரிப்பைப் பதிவாக்கியுள்ளது.
இதன் பிரகாரம், 2017 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாக்கப்பட்ட ரூ. 13.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 17.6 பில்லியன் என்ற NII தொகையை வங்கி பதிவாக்கியுள்ளது.
வங்கியின் நிதித்தளத்தில் பதிவு செய்யப்பட்ட காத்திரமான வளர்ச்சியின் அனுசரணையுடனேயே மேற்குறிப்பிட்ட பெறுபேறுகளை அது அடையப்பெற்றுள்ளது. 2018 முதல் அரையாண்டில் வங்கியின் முற்பணத் துறையானது 10.0% இனால் (20.0% வருடாந்த வீதம்) வளர்ச்சி கண்டுள்ளதுடன், அதன் வைப்புத் துறையானது 7.4% இனால் (14.8% வருடாந்த வீதம்) வளர்ச்சி கண்டுள்ளது.
2018 முதல் அரையாண்டில் உரிமைப் பங்கு (Right issue) விநியோகத்தின் மூலமாகவும் (ரூ. 12.5 பில்லியன்) மற்றும் கடனீட்டுப் பத்திர பங்கு (Debenture issue) விநியோகத்தின் மூலமாகவும் (ரூ. 7.5 பில்லியன்) வங்கியானது நிதியைத் திரட்டியுள்ளது. காலத்திற்கு ஏற்ப சொத்து மற்றும் பொறுப்பு உற்பத்திகளின் மறு-விலையீடு (Re-pricing) மற்றும் வங்கியால் கைக்கொள்ளப்பட்ட ஏனைய நிதி முகாமைத்துவ மூலோபாயங்கள் NII இல் அது 34.3% வளர்ச்சியை அடைவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago