Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 01 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வோதய டிவலொப்மன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக தர்மசிறி விக்கிரமதிலக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரமதிலகவின் தலைமையின் கீழ் அவரின் வழிகாட்டலு டன், புதிய பரிமாணங்களை நிறுவனம் அடையப்பெற்று, எதிர்காலத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒர் அபிவிருத்தி வங்கியாக மாறும் என இளைப்பாறிச் செல்லும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீந்திர ரஞ்சித் நம்பிக்கை வெளியிட்டார். நிறுவனத்தை முழுமையான ஒரு நிதியியல் சேவை வழங்குநராக விருத்தி செய்வதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாற்றங்களைப் பூர்த்தி செய்வதற்குப் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நிறுவனத்தை வழிநடாத்திச் செல்வார்.
தனது தாய் நிறுவனமான சர்வோதய இயக்கத்தின் “அடிப்படை மட்டத்திலிருந்து வளர்ச்சி காணுதல்” என்ற கோட்பாட்டின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பி அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற ஆழமான அர்ப்பணிப்பின் பலனாகவே சர்வோதய டிவலொப்மன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் உதயமாகியது. சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ. ரி ஆரியரட்னவின் கொள்கைகளின் உந்துசக்தியுடன்,
“கண்ணியமாக வாழும் வகையில், பொருளாதார ரீதியாக முற்போக்குடைய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழிகாட்டியாகச் செயற்படுதல்” என்பதே நிறுவனத்தின் புதிய இலட்சியமாகும். இந்த தொலைநோக்குடனான இலட்சியத்தின் அடிப்படையில் “தொழில்தர்மத்துடனான நிதியியல் சேவைகளை வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் ஆகியவற்றினூடாக நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தியை வளர்ச்சி காணச் செய்தல்” என்ற செயல்நோக்கு உதித்தது. மகாத்மா காந்தியின் சமூகக் கோட்பாடு மற்றும் பௌத்த சமயத்தின் ஆன்மீக போதனைகளின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டுவருகின்ற சர்வோதய, தற்போது இலங்கையிலுள்ள மிகவும் பழமையான அரச சார்பற்ற நிறுவனமாகும்.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான விக்கிரமதிலக, ஒரு பட்டய இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். அத்துடன் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தில் முழுமையானக் கணக்காளர் தகைமையையும் பூர்த்தி செய்துள்ளார். மேலும் தாய்லாந்து பாங்கொங் நகரிலுள்ள Asian Institute of Technology இல் MBA பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .