Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு ஏழு கட்டங்களாக வழங்க முன்வந்திருந்த குறைந்த வட்டி வீதத்திலான கடன் தொகையின் ஆறாவது கட்டத்தை வழங்குவது தொடர்பான ஐந்தாவது மீளாய்வு பேச்சுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாகவே, இந்தத் தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில், இந்தக் கடன் தொகையை இலங்கைக்கு நான்கு கட்டங்களாகப் பிரித்து வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் முன்வந்திருந்தது.
இந்தக் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கைக்கு பொருளாதார ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான சில நிபந்தனைகளையும் இலக்குகளையும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 26ஆம் திகதியன்று, நாட்டில் அரசியல் குழப்பநிலை ஏற்படுவதற்கு இரு வாரங்கள் முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2019ஆம் ஆண்டுக்காக, இலங்கை உறுதியான பாதீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனூடாக ஏற்கெனவே பெற்றுக் கொண்ட சர்வதேசக் கடன்களை மீளச் செலுத்துவது தொடர்பான தெளிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், கடன்களை நிலைபேறான வகையில் மீளச் செலுத்துவது, பாரியளவிலான கடன் மீளச் செலுத்துகைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நிலையில், முதலீட்டாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவது போன்றன தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, 2019ஆம் ஆண்டுக்கான பரிபூரண பாதீடு இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை மொத்தமாக பெற்றுக் கொள்ள வேண்டிய 1.5 பில்லியன் டொலர்கள் கடன் தொகையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆறாம் கட்டமாக இலங்கைக்கு வழங்கப்படவிருந்ததுடன், 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியுடன் இந்தத் தொகை வழங்கித் தீர்க்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago