2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிறந்த தொழில் முனைவராக அபான்ஸ் குழுமத்தின் தலைவி தெரிவு

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 04:03 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

பன்முகத் துறைகளில் சாதித்த, இலங்கையின் மிகச்சிறந்த சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பாராட்டி, அவர்கள் செய்த சாதனைகளுக்காக விருதுகளை வழங்கும் விழாவொன்றை, சமீபத்தில் தெரண தொலைகாட்சி நிறுவனம் மேற்கொண்​டிருந்தது. 2017 Sri Lankan of the Year என்பதே, அந்த விருது வழங்கும் விழாவாகும். இந்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் இவ்வருடத்துக்கான மிகச்சிறந்த தொழில் முனைவர் என்ற விருது, அபான்ஸ் குழுமத்தின் தலைவி திருமதி. அபான் பெஸ்டோன்ஜிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1968ஆம் ஆண்டு, ஒரு சிறிய தொகை முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அபான்ஸ் வியாபாரம், இன்று நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்புடன் மிகவும் பிரமாண்டமான, அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. ஏலமிடப்பட்ட இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரமாக சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வியாபாரம், அக்காலத்து இல்லத்தரசிகளின் வாழ்க்கையைச் சுலபமாக்கி, அவர்களுக்குப் புதுவிதமான அனுபவங்களைத் தந்தது.

1978ஆம் ஆண்டளவில், நாட்டில் திறந்த பொருளாதாரம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில், உலகளாவிய ரீதியில் உயர் விற்பனை நாமங்களைக் கொண்ட உயர்தரத்திலான உற்பத்திகளை, இலங்கையில் இறக்குமதி செய்வதற்கான முதற்படியை திருமதி. அபான் பெஸ்டோன்ஜி எடுத்து வைத்தார். இதன் அடிப்படையில் உலகளாவிய மிகச்சிறந்த இலத்திரனியல் உற்பத்திகளை முதல் முறையாக உள்நாட்டு வாடிக்கையாளர்களின் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.

அது இன்று படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு விற்பனை நாமங்களின் இலங்கைக்கான பிரதான விற்பனை பங்காளியாக அபான்ஸ் குழுமம் திகழ்ந்து வருகிறது.

அபான்ஸ் வியாபாரக் குழுமம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட பன்முக வியாபாரங்களை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பாகும். இது சில்லறை வியாபாரம், சேவைகள், வழங்கல், உற்பத்தி, நிதியியல், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், போக்குவரத்து மற்றும் இன்னும் பல்வேறு துறைகளில் துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரைக் காலமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேன்மையாக பெற்றுள்ள திருமதி. அபான் பெஸ்டோன்ஜியின் தொலைநோக்கு வியாபார ஞானம் மற்றும் தலைமைத்துவ சிறப்பம்சமே, இந்த சிகரம் தொடும் வெற்றிகளுக்கான அடித்தளமாகும். 400க்கும் அதிகமான காட்சியறைகள், 16க்கும் அதிகமான சேவை மத்திய நிலைய வலையமைப்பு மூலம் இலங்கை பூராகவும் அபான்ஸ் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் வழங்கப்படும் சகல விற்பனை நாமங்களும் எல்லோர் மனங்களையும் வென்று அவர்களின் அத்தியாவசிய விற்பனை நாமமாக திகழ்ந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள், இடர்களை எதிர்கொள்ள தயாராகுதல், தவிர்க்கமுடியாத ஊக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை வாடிக்கையாளர்களின் மத்தியில் நம்பிக்கை நிலைநாட்டுவதற்கு அபான்ஸ் குழுமத்திற்கு உருதுணையாக உள்ளது. திருமதி. அபான் பெஸ்டோன்ஜி கருத்து தெரிவிக்கையில், “நேர்மை, விடாமுயற்சி, அதீத உழைப்பு இவை மூன்றையும் பின்பற்றும் எவருக்கும் வெற்றியின் வாயில் எப்போதும் திறந்திருக்கும்” என்று தெரிவித்தார்.


  Comments - 1

  • jeeva Monday, 09 October 2017 08:42 AM

    waalga ivarin sevai oopodu.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .