Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (இ.பி.ப.ஆ) கொழும்பு பங்குப் பரிவர்த்தனையுடன் (கொ.ப.ப) இணைந்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளை (சி.ந.தொ) கொ.ப.ப இன் சி.ந.தொ பலகைக்கு கவர்வதற்காக ‘வலுவளித்தல்’ எனும் நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளது.
மூலதன - பங்குச் சந்தையை முறைமைப்படுத்துபவர் என்ற ரீதியில் இ.பி.ப.ஆ ‘வலுவளித்தல் - சிறிய, நடுத்தர தொழில்முனைவுப் பலகையின் அங்குரார்ப்பணைத்தை விரைவுபடுத்துவதுடன் இது கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கு சிறிய, நடுத்தர தொழில்முனைவுகளை கொண்டுவரும் ஒரு மேடையாக உருவாக்கப்படுகின்றது.
இ.பி.ப.ஆ இன் தலைவர் ரணெல் டி விஜேசிங்கவால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மூலதனச் சந்தை முன்னெடுப்புகளின் ஒரு நிகழ்வாக இந்த அங்குரார்ப்பணம் அமைந்துள்ளது.
முதன் முறையாக எமது நாட்டின் இ.பி.ப.ஆ மற்றும் கொ.ப.ப இன் வரலாற்றிலேயே சிறிய, நடுத்தர தொழில்முனைவுகளுக்கான ஒரு பிரத்தியேக மேடையை உருவாக்கும்.
சிறிய, நடுத்தர தொழில் முனைவுகளைப் பலகையின் பின்னணி மற்றும் அதற்கான காரணவிளக்கம் பற்றி இ.பி.ப.ஆ இன் தலைவர் ரணெல் டி விஜேசிங்க குறிப்பிடுகையில், “இலங்கை, தெற்காசியாவைப் பொறுத்தளவில், பல துறைகளில் கணிசமானளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தளவில் இன்னும் பாரியளவிலான வெளித்தோன்றும் பொருளாதாரமாகவே காணப்படுகின்றது. இதனுள் இலங்கை மெய்யாகவே ஒரு வல்லமைமிக்க பொருளாதாரமாகக் காணப்படலாம். எமது முழுமையான ஆற்றலை இன்னமும் நாம் அடையவில்லை என்பதுடன் இதை நாம் நீண்ட காலமாகக் கூறிவருகின்றோம். ஆனால், வளர்ச்சி என்பது சமநிலையாகக் காணப்படல் வேண்டும். வளர்ச்சி என்பது நிறைவாகவும் நேர்மையாகவும் காணப்படுவதுடன் முக்கியமாக நீடிப்புத்திறனுடையதாக இருத்தல் வேண்டும். நாம், சமனான பொருளாதார வளர்ச்சியை அடையவேண்டுமானால், எமது முழு நாட்டிலும், சமநிலையான பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, நகரம், கிராமங்களிடையே, விவசாயம், கைத்தொழில், சேவைகள் துறையிடையே மதங்கள் சமூகங்களின் பிரதிநிதிகளிடையே நாடு செயலாற்றவேண்டிய கட்டாயமான தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. இது பொருளாதார பலமான அரசியல் ரீதியில் ஸ்திரமான, சமூக ரீதியில் பதிலளிக்கக்கூடிய ஓர் இலங்கையை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலினுள் நாம் சிறிய, நடுத்தர தொழில்முனைவுகள் துறையை அபிவிருத்தி செய்யவேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. நாம் ஓரு மூடிய மற்றும் தனிமைப்பட்ட நாட்டிலிருந்து திறந்த மற்றும் வெளிநோக்கிய நாடாக, 41 வருடங்களுக்கு முன்னர் 1977 இல் உருவாக்கப்பட்ட ஓர் ஏற்றுமதி வழிநடத்தும் வளர்ச்சி மூலோபாயத்துடன், மாற்றமடைந்துள்ளோம். ஆனால், இன்னமும் வெளித்தோன்றும் பொருளாதாரமாகக் காணப்படுகின்ற எமது நாட்டில், சிறிய, நடுத்தர தொழில்முனைவு துறையானது அவசியமான வளர்ச்சி மட்டத்தை எட்டவில்லை. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவு பலகையானது, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளை அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, சர்வதேச மற்றும் உள்நாட்டு மூலதனத்தை பெற்றுக்கொள்வதற்கு வசதியளிக்கும். மூலதனத்தை பெற்றுக்கொள்வதற்கு அப்பால், புதிய பட்டியலிடல் பின்வரும் வாய்ப்புகளை வழங்குகின்றது. தகவல்களை வெளிப்படுத்துவதனூடாக நம்பகத்தன்மையை கட்டியெழுப்புதல் மற்றும் சமநிலையான ஆளுமை நியமங்களை அவர்களது தோற்றத்தை மேம்படுத்தி, மூலோபாய முதலீட்டாளர்களை கவர்வதற்கும் வசதியளிக்கும். இப்புதிய பட்டியலிடல் பலகை, எதிர்வரும் காலங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளின் தோற்றம் மற்றும் நீடிப்புத்தன்மையில் சாதகமான மாற்றத்தை உருவாக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025