2025 ஜூலை 24, வியாழக்கிழமை

‘சிறுவர் தினத்தைக் கொண்டாட வனாந்தரங்களை வளர்ப்போம்’

Editorial   / 2017 நவம்பர் 01 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் சிறுவர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. தமது பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பாட்டன், பாட்டிமார் செய்யக்கூடிய அர்த்தமுள்ள ஒரு செயற்பாடாக, குழந்தைகளுக்கு சூழலை பாதுகாக்கக்கூடிய மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவித்தலை குறிப்பிட முடியும். 

சதாஹரித பிளான்டேஷன்ஸ் தலைவர் சதீஷ் நவரட்ன கருத்துத்தெரிவிக்கையில், “வணிக வனாந்தரச்செய்கை என்பது, சிறுவர்களுக்கு பொறுப்பான வகையில், சமூக உணர்வுடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு முதலீட்டு முறை என்பதை உணர்த்துவதுடன், அவை முதிர்ச்சியடையும் போது அவர்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கக்கூடியதாகவும் அமைந்திருக்கும். சிறுவர் வளர்ச்சியடைந்த பின்னர், அவர்களின் உயர்க்கல்வியை உள்நாட்டில் அல்லது வெளிநாடொன்றில் தொடர நிதித்தேவை ஏற்படும் போது, குறித்த முதலீடுகள் பயன்தரக்கூடியனவாக அமைந்திருக்கும். 8 வருடங்கள் அல்லது அதற்கு முன்னதாக பயிரிடப்பட்ட மரங்கள், சிறுவர்களின் எதிர்காலத்துக்காக பெறுபேறுகளை வழங்கக்கூடியனவாக அமைந்திருக்கும்’ என்றார். 

26,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சந்தனம், தேக்கு, மஹோகனி, றம்புட்டான் அல்லது அகர்வுட் பெருந்தோட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். சதாஹரித பிளான்டேஷன்ஸ் தற்போது 2,000 ஏக்கருக்கும் அதிகமான வணிக வனாந்தரங்களை பராமரித்து வருவதுடன், சூழல் பாதுகாப்புக்கு வழங்கும் பங்களிப்புக்காக தங்க விருதை வென்றுள்ளது. புவி வெப்பமடைதலுக்கு பங்களிப்பு வழங்கும் பச்சை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தணிப்பதற்கு மீள்வனாந்தரச் செய்கை என்பது மிகவும் சிக்கனமான செயற்பாடாக அமைந்துள்ளது. 

அகர்வுட் உள்நாட்டில் வல்லப்பட்டை என அழைக்கப்படும் தாவர இனத்தை சார்ந்ததாக அமைந்துள்ளது. இந்த வகை தாவரத்தை, தென்மேற்கு பிராந்தியத்தின் குறைந்த ஈரப்பதனுடன் கூடிய வனாந்தரங்களில் காண முடியும். இந்தத் தாவரம் வளரக்கூடிய சூழல், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீற்றருக்கு குறைவாக இருப்பதுடன், வருடாந்த மழை வீழ்ச்சியாக 2000 - 3000 மில்லி மீற்றரை கொண்டிருக்க வேண்டும். சராசரி வெப்பநிலை 25 - 27 பாகை செல்சியஸாக அமைந்திருக்க வேண்டும். இலங்கையில் இந்த காலநிலை நிலவுவதால் அகர்வுட் செய்கைக்கு மிகவும் உகந்ததாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் அகர்வுட்களுக்காக கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளது. உலகின் அதிகளவு விலை நிறைந்த வாசனைத்திரவியங்கள் வகைகளை உற்பத்தி செய்வதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, இலங்கையிலிருந்து அகர்வுட் ஏற்றுமதியை விஸ்தரிப்பதற்கு ஏதுவாக அமையும்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .