Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
Havelock City Mall அண்மையில் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்கள் ஓவியப் போட்டி நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கி பங்காளராக கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை வழங்கியிருந்தது. 4 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
‘HCM படைப்பாற்றல் வெற்றித் தலைவர்கள் 2025' எனப் பெயரிடப்பட்ட இந்தப் போட்டி, கொமர்ஷல் வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்கான 'அருணலு'வுடன் தொடர்புடையதாக அமைந்திருந்தது. மேலும் வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசில்களை வங்கி வழங்கியது. இந்த நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் கூடத்திற்குச் சென்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் இலவசமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் அன்றைய தினம் அருணலு சேமிப்புக் கணக்குகளைத் திறந்தவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கப்பட்டன.
கொமர்ஷல் வங்கியின் முதன்மையான சிறுவர் சேமிப்புக் கணக்கான அருணலு, சிறுவர் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குவதுடன், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தங்கள் பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று சித்தியடையும்பட்சத்தில் சிறப்பு ரொக்கப் பரிசில்களையும் வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கி மற்றும் Havelock City Mall இன் பிரதிநிதிகளுடன் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago