2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சூழல் பாதுகாப்பு தொடர்பில் eSiphala ஊடாக ஒன்லைன் விரிவுரை முன்னெடுப்பு

S.Sekar   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL மற்றும் இலங்கை இயற்கை ஆர்வலர்கள் (LNC) அமைப்பு ஆகியன இணைந்து மாதாந்த இலவச ஒன்லைன் விரிவுரைத் தொடரை eSiphala ஊடாக முன்னெடுத்து, நாட்டின் செழுமையான சூழல்சார் பாரம்பரியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளன. ‘COVID-19 & Future Conservation Challenges’, “Recognizing commonly found Venomous and Non-Venomous Snakes”மற்றும் “What if Mangroes are not there?” ஆகிய தலைப்புகளில் மூன்று விரிவுரைகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சூழல் விஞ்ஞான பிரிவின் பேராசிரியரும், இலங்கையிலுள்ள முன்னணி பறவையியல் வல்லுநர் (ornithologist) வித்யாஜோதி, பேராசிரியர் சரத் கொட்டகம, ஆய்வாளரும், சூழலியலாளரும், இயற்கை புகைப்படக் கலைஞரும் பேராசிரியருமான மென்டிஸ் விக்ரமசிங்க, வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், தேசிய கண்டல்காடு நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியும், பொதுநலவாய ப்ளு காபன் திட்டத்தின் அங்கத்தவருமான பேராசிரியர் செவ்வந்தி ஜயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LNC என்பது இலங்கையில் இயங்கும் தன்னார்வ, இலாப நோக்கற்ற வனஜீவராசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைக் கொண்ட அமைப்பாகும். இளம் விலங்குகள் சம்மேளனத்தின் (YZA) கடந்த கால அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்பு என்பதுடன், இவர்கள் மீள ஒன்றிணைந்து இலங்கையின் இயற்கை சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளனர்.

எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை சூழலை பாதுகாத்து பேணி வழங்குவதற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் இயற்கை சூழல்கட்டமைப்பை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயலாற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மைக் குடிமகன் எனும் வகையிலும், SLT-MOBITEL ஆனது LNC உடன் கைகோர்த்து ஒன்லைன் விரிவுரைகளினூடாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளது. ‘Earth is calling are you listening?’ எனும் தொனிப்பொருளில் விரிவுரைகள் அமைந்திருந்ததுடன், உயிரியல் பரம்பல் தொடர்பில் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது. குறிப்பாக, இலங்கையின் இயற்கை சூழல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் முக்கியத்துவமளித்திருந்தது. SLT-Mobitel வழங்கும் eSiphala என்பது டிஜிட்டல் கற்பித்தல் மற்றும் பயிலலை மேம்படுத்தும் வகையில் விரிவுரைகளை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டம் தொடர்பாக SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது இயற்கை சூழல் மற்றும் வளங்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சரியான மற்றும் விஞ்ஞான ரீதியான தகவல்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் பொது மக்களுக்கு விரிவுரைத் தொடரினூடாக சரியான களம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். சூழல் தொடர்பில் கவனம் செலுத்துகின்றமைக்காக SLT-MOBITEL தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளதுடன், இவ்வாறான விரிவுரைகளை ஏற்பாடு செய்வதனூடாக, மேலும் பல பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்பதுடன், எமது எளிதில் பாதிப்புறக்கூடிய சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.” என்றார்.

உலகில் உயிரியல்பரம்பல் அதிகளவில் காணப்படும் நாடுகளில் 34ஆம் இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போதியளவு விழிப்புணர்வின்மை காரணமாக, மாசடைதல், வனஅழிப்பு அல்லது காலநிலை மாற்றம் போன்ற இடர்களால் நாட்டின் பெறுமதி வாய்ந்த சூழல்கட்டமைப்புகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இவ்வாறான அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் பிரதான நோக்கங்களாக, பொது மக்களை துல்லியமான தகவல்களுடன் சென்றடைவது, குடிமக்களை ஊக்குவிப்பது, இயற்கை பாதுகாப்பு மற்றும் பேணல் தொடர்பில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வது, தினசரி செயற்பாடுகளில் சூழல்சார் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல், பொறுப்பு வாய்ந்த நடத்தை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் தீர்மானங்களை மேற்கொள்ளல் மற்றும் சூழலை பாதுகாப்பதற்கான ஆர்வத்தை அதிகரித்தல் போன்றன அமைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .