S.Sekar / 2021 நவம்பர் 26 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தென் கொரியாவின் STAREMIT உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சௌகரியமாக உடனுக்குடன் இலங்கைக்கு பணத்தை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்க வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் பல இலங்கையர்கள் பணத்தை அனுப்ப முன்வந்துள்ள நிலையில், இந்த பங்காண்மை தொடர்பான அறிவித்தலை செலான் வங்கி வெளியிட்டுள்ளது. செலான் வங்கியின் அர்ப்பணிப்பான பண அனுப்பல் வாய்ப்பினூடாக, நாட்டினுள் பணத்தை அனுப்புவது பாதுகாப்பானதாகவும் சகாயமானதாகவும் அமைந்துள்ளது.

தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் STAREMIT app ஐ பயன்படுத்தி ஸ்மார்ட் சாதனம் ஒன்றினூடாக 24/7 நேரமும் கொடுக்கல் வாங்கல்களை சௌகரியமாக மேற்கொள்ள முடியும் என்பதுடன், செலான் வங்கியினூடாக பணத்தை அனுப்பும் போது, 2021 நவம்பர் 30 ஆம் திகதி வரை எந்தத் தரப்பினராலும் எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது. பணத்தை அனுப்புபவர்களுக்கு போட்டிகரமான நாணயமாற்று விகிதங்களின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 2 ரூபாயை பெற்றுக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது. உடனடியாக பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என்பதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்படும்.
செலான் வங்கியின் செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் மலிக் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருகை மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருக்கும் காலகட்டத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைக்கான தமது வெளிநாட்டு பண அனுப்புகைகளை மேற்கொள்வதற்கு சௌகரியமான மற்றும் சகாயமான தெரிவுகளை வழங்குவதையிட்டு செலான் வங்கி பெருமை கொள்கின்றது. STAREMIT உடனான பங்காண்மையின் மூலமாக, தென் கொரியாவில் வசிக்கும் பெருமளவான இலங்கையர்களுக்கு பாதுகாப்பான முறையில் தமது பணத்தை இலங்கையிலுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், உலகளாவிய ரீதியில் காணப்படும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நாம் எமது தந்திரோபாய பங்காண்மைகளை தொடர்ந்தும் கட்டியெழுப்பி, எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவோம்.” என்றார்.
செலான் வங்கியின் உறுதியான சர்வதேச பண அனுப்பல் பங்காளர்கள் வரிசையில் STAREMIT இணைந்துள்ளது. இதனூடாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சௌகரியமான முறையில் பணத்தை அனுப்பும் வசதியை வங்கி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வங்கி எனும் வகையில், வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அவர்களின் அன்புக்குரியவர்கள் தொடர்பில் செலான் வங்கி கவனம் செலுத்தி, அவர்களின் கொடுக்கல் வாங்கல்களுக்கு பல்வேறு அனுகூலங்களை சேர்த்துள்ளது.
8 minute ago
11 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
29 minute ago
36 minute ago