2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

செலான் வங்கிக்கு SLT 01 விருது

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு நிறுவன அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட முதலாவது டிஜிட்டல் விருது வழங்கல் விழாவாக அமைந்த ‘SLT 01’ இல், செலான் வங்கியியால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘செலான் அலுவலக சவால்’ (Seylan Office Challenge) செயற்பாட்டுக்காக ‘முதலாவது டிஜிட்டல் இடைத் தொடர்புபட்ட பிரசாரம்’ என்ற விருது, செலான் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பல வருடங்களாக டிஜிட்டல் ஊடக சந்தைப்படுத்தல் துறையில், செலான் வங்கி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சிறப்புத்துவத்தை மீள உறுதிப்படுத்துவதாக இவ்விருது அமைந்துள்ளது. பல்வேறுபட்ட விருதுப் பிரிவுகளின் கீழ் பல நிறுவனங்கள் பங்குபற்றியிருந்த இவ்விருது வழங்கலுக்காக, செலான் வங்கி சமர்ப்பித்த மிகச் சிறந்த டிஜிட்டல் சேவைக்கான மூன்று விண்ணப்பங்களுக்காக அவற்றினது குறும்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், மிகச் சிறந்த இணையத்தள விருதுப் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.  

பல்வேறுபட்ட நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்காக ‘செலான் அலுவலக சவால்’ (Seylan Office Challenge) செலான் வங்கியால் செயன்முறை ரீதியாக காண்பிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அணியினர் அனைவரும் ஓர் அலுவலக சூழலைப் போன்ற வடிவில் அமர்ந்து கொண்ட அதேவேளை, ஒவ்வோர் அணிகளும் எடுத்துக்காட்டாக அலுவலகங்களில் விளையாடப்படும் வழக்கத்துக்கு மாறான விளையாட்டுகளில் பரஸ்பரம் போட்டியிட்டனர்.  

செலான் வங்கியானது, மிகுந்த சமூக ஈடுபாட்டைக் கொண்ட வங்கியாக காணப்படுவதுடன், ஈடுபாடுடைய மிகப் பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கின்றது. அதேநேரம், கடந்த பல வருடங்களில் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடக சந்தைப்படுத்தலுக்காக அதிகமான விருதுகளைப் பெற்ற வங்கி என்ற பெருமையையும் பெறுகின்றது. இவ்வாறு இதுவரை 35 உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் வங்கிக்கு கிடைத்துள்ளன. தமது வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவை அனுபவத்தை வழங்குவதற்காக, பல ஊடகங்களை மேம்படுத்தும் பணியை, வங்கி மேற்கொள்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .