Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி பிஎல்சி தனது பிரதம செயற்பாட்டு அதிகாரியாக ரமேஷ் ஜயசேகரவை நியமித்துள்ளது. 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் வங்கியியல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட ரமேஷ் ஜயசேகர, செலான் வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, பிரான்ஸ் வங்கியியல் முன்னோடியான BNP Paribas இன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பஹ்ரெய்ன் அலுவலகத்தில் பிரதி பிராந்திய நிதிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியிருந்தார். 2011 ஆம் ஆண்டு பிரதம நிதியியல் அதிகாரியாக வங்கியுடன் இணைந்து கொண்டார், அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் பிரதம இடர் அதிகாரி, 2018 ஆம் ஆண்டில் கூட்டாண்மை வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் போன்ற பதவிகளை வகித்திருந்ததுடன், 2019 ஆம் ஆண்டில் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.
பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் வகையில் ரமேஷ் ஜயசேகர, செலான் வங்கியின் முழுக் கிளை வலையமைப்பு, கடன் மையங்கள் அடங்கலாக கிளை கடன் செயற்பாடுகள், கடன் கண்காணிப்பு, நுகர்வோர் வங்கியியல், மீட்புகள், சட்டம், வைப்புகள் முகாமைத்துவம், செலான் கார்ட் சென்ரர், எல்லை வியாபாரம் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பாக செயலாற்றுவார்.
வங்கியின் வரலாற்றில் மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த காலப்பகுதியில் செலான் வங்கியுடன் ரமேஷ் ஜயசேகர இணைந்து கொண்டார். வங்கியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலைக்கு முக்கிய பங்காற்றியிருந்தார். பலதரப்பட்ட சந்தைகள் மற்றும் வங்கியியல் செயற்பாடுகளில் வெளிப்பாட்டை ஜயசேகர கொண்டுள்ளதுடன், தந்திரோபாய விருத்தி, மாற்றியமைப்பு மற்றும் மீள்-கட்டமைப்பு போன்ற வங்கியின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளார்.
வங்கியியல், நிதியியல் முகாமைத்துவம் மற்றும் கணக்காய்வு அனுபவம் ஆகியவற்றில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை ரமேஷ் ஜயசேகர கொண்டுள்ளார். BNP Paribas உடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, HSBC ஸ்ரீ லங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் வதிவிட முகாமையாளராகவும், KPMG = லங்காவின் கணக்காய்வு முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார். கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரமேஷ் ஜயசேகர, கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வியகத்தின் அங்கத்தவர் என்பதுடன், பிரித்தானியாவின் பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். மேலும், இலங்கை சான்றளிக்கப்பட்ட நிர்வாக கணக்காளர்கள் அமைப்பின் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
18 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
45 minute ago
1 hours ago