Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் வலுவூட்டுவதில், 30 வருட காலமாகப் புத்தாக்கமான மற்றும் சௌகரியமான வங்கியியல்த் தீர்வுகளை, செலான் வங்கி வழங்கி வருகிறது. தனது 30 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் வகையில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் முதல் அங்கமாக, வங்கியின் தலைமையகத்தில் ‘பிரித் பூஜை’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கு ஆசிவேண்டி, இந்தச் சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செலான் வங்கி, 1988 மார்ச் 24ஆம் திகதி, வியாபாரச் செயற்பாடுகளைக் கொழும்பு, கோட்டைப் பகுதியில் ஆரம்பித்திருந்தது.
ஆரம்பம் முதல், வங்கி தனது உறுதி மொழியான, ‘அன்புடன் அரவணைக்கும் வங்கி’ என்பதற்கமைய, புரட்சிகரமான வங்கியியல்த் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.இந்தச் சமய நிகழ்வு, செலான் வங்கியின் தலைவர் ரவி டயஸ், பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, கூட்டாண்மை நிர்வாகத்தினர் மற்றும் வங்கியின் இதர ஊழியர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இலங்கையில், தொடர்ச்சியாக 30 வருடங்களாக, உறுதியான நிதி நிலை, ஆற்றல் மற்றும் நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கி வருகின்றது.
இலங்கையில் சிறந்த நிதிச் சேவைகளை வழங்கும் வங்கியாகத் திகழ்வது எனும் நோக்கத்துடன் இயங்கும் செலான் வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன், அவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தும் தனது பெறுமதி உருவாக்கலை மேற்கொண்டும் வருகின்றது.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago