Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 மே 06 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
1988 ஆம் ஆண்டு தனது சேவைகளை ஆரம்பித்திருந்த, செலான் வங்கி, வாடிக்கையாளர்களுக்கான தனது 35 வருட கால சேவைப் பூர்த்தியை கொண்டாடுகின்றது. சகல பங்காளர்களுக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் சிறப்பைப் பெற்றுக் கொடுத்த வண்ணமுள்ளது.
இச் சிறப்பைக் குறிக்கும் விசேட வைபவம், வங்கியின் மில்லேனியம் கிளையில் அண்மையில் சமய அனுஷ்டாங்களுடன், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், கூட்டாண்மை நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. பி. நந்தலால் வீரசிங்க, நிகழ்வில் பிரதம உரையை ஆற்றியிருந்தார். செலான் வங்கியின் தலைவர் ரவி டயஸ் மற்றும் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.
செலான் வங்கி தனது முதல் கிளையை ஆரம்பித்தது முதல், நாடளாவிய ரீதியில் தனது கிளை வலையமைப்பை விஸ்தரிப்புச் செய்துள்ளதுடன், தனது 171 கிளைகள், 216 ATMகள், 70 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் 96 காசோலை வைப்பு இயந்திரங்கள் மற்றும் பல டிஜிட்டல் வங்கிச் சேவை தீர்வுகள் ஆகியவற்றைக் கொண்டு, வளர்ந்து செல்லும் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள், தனிநபர் மற்றும் கூட்டாண்மை வியாபார வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்றது.
வங்கியின் வரலாற்றில், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சமூககத்தாருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நாட்டின் வங்கியியல் துறையில் தொடர்ச்சியாக புரட்சியை ஏற்படுத்தி வரும் செலான் வங்கி, தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம், புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் சிறந்த சேவைகள் போன்றவற்றினூடாக நிகரற்ற வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டு இயங்குகின்றது. வாடிக்கையாளருக்கு முன்னுரிமையளிப்பது எனும் கொள்கை சகல ஊழியர்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகவும், நம்பிக்கையானதுமான உறவைப் பேணி வருகின்றமை, வங்கி வெற்றிகரமாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது வரலாறு தொடர்பில் நாம் பெருமை கொள்வதுடன், எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம். கடந்த தசாப்த காலத்தில், வங்கியின் மொத்த சொத்துகள், வைப்புகள் மற்றும் முற்பணங்கள் போன்றன 300% இனால் வளர்ச்சி கண்டுள்ளதுடன், எமது வருமானம் நான்கு மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், எமது வரிக்குப் பிந்திய இலாபம் இரட்டிப்படைந்துள்ளது. 35 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் நிலையில், வங்கியின் வரலாற்றில் உயர்ந்த ஐந்தொகை மீதியை தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பதிவு செய்திருந்தது. ஆரம்பம் முதல் செலான் வங்கியின் கலாசார அடையாளமாக அமைந்துள்ள புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைச் சிறப்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி, சீரமைக்கப்பட்டு மற்றும் வெளிப்படையானதாக அமைந்துள்ளது. இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது, சகல பங்காளர்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவிகளை வழங்குவது மற்றும் எமது நாட்டுக்கும், மக்களுக்கும் பொருளாதார சுபீட்சத்தை நிலைபேறான வகையில் எய்தச் செய்வது எனும் நோக்கத்தை நோக்கி பயணிப்பதற்கு விறுவிறுப்பு, வலிமை, சக்தி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் செலான் வங்கி திகழ்கின்றது.” என்றார்.
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
1 hours ago