Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலும் காணப்படும் கிளைகளில், இணைய வங்கிச்சேவைப் பாவனையை ஊக்குவிக்கும் வகையில், செலான் வங்கி ‘Prizes and surprises with Seylan Internet Banking’ எனும் விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை கடந்த மாதங்களில் முன்னெடுத்திருந்தது.
செலான் இணைய வங்கிச்சேவையுடன் பதிவு செய்து கொண்டவர்கள், இலவசமாக இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், இணைய வங்கிச்சேவை ஊடாகக் கொடுக்கல் வாங்கலொன்றை மேற்கொள்வோருக்கு, இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பெறப்பட்ட பல விண்ணப்பங்களிலிருந்து 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் I phones, tabs மற்றும் மடிக்கணனிகள் போன்றன முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், தலா 10,000 ரூபாய் பெறுமதியான ஏழு ஆறுதல் பரிசுகளும் மூன்று மாதங்களிலும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
சகல வாடிக்கையாளர்களாலும் வங்கிச்சேவைகளை சௌகரியமான முறையில், மாற்றுவழிகளில் பயன்படுத்துவதை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக, இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கிச்சேவை நாளிகைகள் குறித்த விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், பல்வேறு நாளிகை வங்கியியல் சூழல்களுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் வங்கி தனது வாடிக்கையாளர்களை இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாகப் பழக்கப்படுத்தியிருந்தது.
செலான் வங்கி, தான் முன்னெடுக்கும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களினூடாகவும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளைச் சேர்ப்பது என்பதில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவான முறையில் முன்னெடுப்பதற்கு நவீன தொழில்நுட்ப மேம்படுத்தல்களை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது.
மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக செலான் வங்கி தனது டிஜிட்டல் நாளிகை
யை வடிவமைத்திருந்ததுடன், நவீன டிஜிட்டல் கட்டமைப்புகளிலும் பிரவேசித்து வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கியியல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.
தொடர்ந்து தனது டிஜிட்டல் துறையில் மேம்படுத்தப்பட்ட மாதிரிகளை உள்வாங்கி, வெகுமதித் திட்டங்களையும் வடிவமைத்து, வாடிக்கையாளர்களை வளமூட்டவும் முன்வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
9 hours ago