2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செலான் வங்கியின் சகல அட்டைகளுக்குமான பாதுகாப்பு மேம்படுத்தல்

S.Sekar   / 2022 மே 11 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, தனது வழங்கல் மற்றும் கொள்முதல் கட்டங்களுக்கான ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் பாதுகாப்பு கட்டமைப்பை EMV 3DS 2.0க்கு மேம்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, இலங்கையில் இந்த பாதுகாப்பு மெருகேற்றத்தை மேற்கொண்டுள்ள முதலாவது வங்கிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த மேம்படுத்தலினூடாக உயர் மட்ட மோசடி தவிர்ப்பு ஆற்றல் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், செலான் வாடிக்கையாளர்களுக்கு தமது Mastercars மற்றும் VISA கார்ட் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

தற்சமயம், கணனிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், டெப்கள் மற்றும் Alexa மற்றும் Google Home போன்ற பல்வேறு சாதனங்களினூடாக டிஜிட்டல் முறைகளில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இந்த கொடுக்கல் வாங்கல் முறைகள் கொடுப்பனவு செயற்பாடுகளை வேகமானதாகவும், அதிகளவு சௌகரியமானதாகவும் திகழச் செய்வதுடன், ஈடுபாட்டுக்கு அதிகளவு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இனங்காணல், உறுதி செய்தல் மற்றும் அங்கீகரித்தல் போன்ற ஆழமான பாதுகாப்பு செயன்முறைகளையும் தேவையாக கொண்டுள்ளன.

வங்கியின் பிரதான செயற்பாடுகளில், வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் நிலையில், வாடிக்கையாளர்களின் மேம்பாட்டையும் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்கு சிறந்த முறையில் பொருந்தக் கூடியதாக செயற்பாடுகள் மற்றும் செயன்முறைகள் அமைந்திருப்பதை செலான் வங்கி உறுதி செய்கின்றது. அதற்கமைய, வங்கியினால் தனது சகல அட்டைகளையும் Three Domain Secure (3DS) கட்டமைப்பினூடாக முன்பு செயற்படுத்தியிருந்தது. இதனூடாக அட்டைதாரர்கள் e-வணிக இணையத்தளங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி card-not-present (CNP) கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகின்றது. 3DS 2.0க்கு மேம்படுத்தப்பட்டுள்ளதனூடாக, வாடிக்கையாளர்களின் அட்டை கொடுக்கல் வாங்கல்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்கி, குறைந்தளவு போலியான நிராகரிப்புகள் மற்றும் குறைந்தளவு உறுதிப்படுத்தல்களை வழங்குகின்றது.

செலான் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி ருச்சித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “முதலில் 3DS 2.0க்கு மெருகேற்றத்தை மேற்கொண்டுள்ள வங்கிகளில் ஒன்றாக திகழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். இதனூடாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சௌகரியமான வங்கிச் சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்துள்ளது. வங்கிகள் தற்போது எதிர்கொண்டுள்ள மாபெரும் சவால்களில் ஒன்றாக, மோசடியான செயற்பாடுகளை இனங்காண்பது மற்றும் போலியான நிராகரிப்புகளை குறைப்பது போன்றவற்றைக் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை சரியான அளவில் வழங்குவது ஆகும். மேம்படுத்தப்பட்ட தரவு பரிமாற்றம் மற்றும் இடர் அடிப்படையிலான உறுதிப்படுத்தல் போன்றவற்றினூடாக, CNP மோசடியை குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு இலகுவான அட்டையாக அமைந்திருக்கச் செய்யும். இதன் பெறுபேறாக, எந்தவொரு கொடுக்கல் வாங்கல் இடம்பெறும் பகுதியிலும் அட்டையைப் பயன்படுத்துவதில் எவ்விதமான சந்தேகங்களையும் கொண்டிருக்க வேண்டியதில்லை.” என்றார்.

 

ஏற்கனவே காணப்படும் கட்டமைப்பில் சில மெருகேற்றங்களை ஏற்படுத்துவதாக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட 3DS அமைந்துள்ளது. வங்கி மற்றும் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பான தரவு பகிர்வு என்பதனூடாக சிறந்த தகவல் ஊட்டப்பட்ட உறுதிப்படுத்தல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இதனூடாக, உறுதி செய்யும் அளவுகள் அதிகரிக்கப்படுவதுடன், CNP மோசடிகள் இடம்பெறுவது குறைக்கப்படும். புதிய வெளியீட்டினூடாக, பாதுகாப்பு வலையமைப்பு மொபைல் app மற்றும் IoT சாதனங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. மொபைல் வணிகம் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மொபைல் நட்பான கட்டமைப்பு என்பது முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. மேலும், EMV 3DS என்பது அதிகம் பாதுகாப்பான மற்றும் பாவனையாளர்களுக்கு நட்பான உறுதிப்படுத்தல்களான one-time passwords (OTPs) போன்றவற்றை கொண்டுள்ளதுடன், பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக அமைந்துவிடக் கூடிய உருக்களைக் கொண்ட கடவுச் சொற்களுக்கு பதிலாக பயோமெட்ரிக் முறையிலான உறுதிப்படுத்தல்களை பயன்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும். உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் அவசியமான தேவையாக அமைந்திருக்கும் CNP கொடுக்கல் வாங்கல்களை உறுதி செய்வதற்கான பல்காரணிய உறுதிப்படுத்தல் (multifactor authentication) என்பதை பின்பற்றுவதாகவும் அமைந்துள்ளமையால், உலகின் பல பாகங்களில் செலான் அட்டைகளை பயன்படுத்தக்கூடியதாக அமையச் செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .