S.Sekar / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரோக்கியமான மற்றும் நிலைபேறான தேசத்தை எய்தும் இலக்குடன், அசேதன உரங்கள் மற்றும் இதர இரசாயன விவசாய உரப் பயன்பாட்டை தடை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், இரு உலகப் புகழ்பெற்ற விவசாய ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, இலங்கையில் காணப்படும் சேதன விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் தொடர்பில் ஆராய்வதற்காக அண்மையில் அழைத்து வந்திருந்தது.

இலங்கையில் நிலவும் சூழல், சேதன விவசாயத்துக்கு மாற்றியமைத்துக் கொள்வது தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கான இந்த செயற்பாட்டிற்காக, துறையின் பல்வேறு தரப்பினரிடமிருந்து பவர் நிறுவனத்துக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இதில் கல்விமான்கள், ஆய்வு நிறுவனங்கள், தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச தலைமை அதிகாரிகள் அடங்கியுள்ளனர்.
தமது விஜயத்தின் போது, உரத் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய சேதன கழிவுகளைப் பெறக்கூடிய பல மூலங்களை அவர்கள் இனங்கண்டிருந்ததுடன், பயிர் முகாமைத்துவம் மற்றும் கொம்போஸ்ட் தயாரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் பல செயற்பாடுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்பில் திருப்தியை வெளியிட்டிருந்தனர். தற்போது இவை சிறியளவில், ஆரம்ப நிலையில் காணப்பட்ட போதிலும், பாரியளவில் முன்னெடுப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதை உணர்த்தியிருந்தன.
பயிர் வகைகள் தொடர்பில் சிக்கல்கள் நிறைந்த பிரச்சனைகளுக்கு அவர்கள் முகங்கொடுத்திருந்தனர். வாசனைத் திரவியங்கள் அல்லது இறப்பர் போன்ற பயிர்கள் சேதன கட்டமைப்பில் இலகுவாக மற்றும் துரிதமாக வளரும் தன்மையை கொண்டுள்ள போதிலும், நெல் மற்றும் தேயிலை போன்ற பயிர்கள் தாதுப் பொருட்கள் அடங்கிய உரப் பாவனையை மேற்கொள்ளாத நிலையில் உற்பத்திக் கட்டமைப்பை பின்பற்றுவதில் அதிகளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும். அதிகளவு நைதரசன் கேள்வி காரணமாக, இந்த வகை பயிர்களுக்கு அசேதன உரப்பாவனை இன்றி மாற்றியமைப்பது என்பது நெருக்கடி வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதை புலப்படுத்தியிருந்தது.
ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் பிளாசர் கருத்துத் தெரிவிக்கையில், “அர்த்தமுள்ள தந்திரோபாய கைகோர்ப்புகளினூடாக சேதன உர பயன்பாட்டு சவாலில் விஞ்ஞானபூர்வ மற்றும் நிபுணத்துவ அனுபவத்தையும் அறிவையும் நாம் ஒன்றிணைத்து முன்னேற்றத்தை பதிவு செய்த வண்ணமுள்ளோம். இந்த ஆய்வினூடாக எதிர்வரும் வாரங்களில் பலதை எம்மால் எதிர்பார்க்க முடியும் என்பதுடன் இந்த மாற்றம் முறையாக நிர்வகிக்கப்படுமானால், நாட்டின் நிலைபேறான எதிர்காலத்துக்கு சூழலுக்கு நட்பான வகையிலும் பொருளாதார ரீதியிலும் அதிகளவு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.” என்றார்.
உடனடி தீர்வுகளுக்கான தேவையை கொண்டுள்ள நாட்டில் தற்போது நிலவும் சூழலில், இந்த மாற்றத்தை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதை ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பெரும்போகத்துக்கு விவசாயிகளுக்கு அசேதன உரங்களை வழங்காது, மண் வளமூட்டல் நிர்வாக தெரிவுகள் வழங்கப்பட வேண்டும் என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாய பிரிவின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரும் பணிப்பாளருமான ஜனக குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “கட்டமைப்பு மாற்றத்தை வினைத்திறன் வாய்ந்த வகையில் நிர்வகிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த கண்டறிதல்கள் உணர்த்தியிருந்தன. செயலிழக்கக்கூடிய அதிக இடரைக் கொண்டுள்ளதால், கடுமையாக அமல்படுத்தாமல் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளக்கூடிய ஒன்றிணைந்த ஏற்பாடுகள் பற்றி பரிந்துரைத்துள்ளது. இந்த செயற்பாடுகளில் பயிர்கள், அமைவிடம் மற்றும் சூழ்நிலை போன்றவற்றுக்கமைவான விவசாயிகளிடையே பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு செயற்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வதும் அமைந்துள்ளது. விதிமுறைகளை திரும்பத் திரும்ப மாற்றியமைக்காது விவசாயிகளுக்கு தெளிவான உறுதியையும், அதிகளவு ஆதரவு மற்றும் தெளிவான வழிகாட்டல்கள் போன்றன வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை கொண்டுள்ளது.” என்றார்.
5 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
28 minute ago