2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஜீ.பீ.டீ சில்வாவுக்கு ஜனாதிபதி விருது

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழாவில் வாசனைப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திப் பிரிவில் 2015 ஆண்டின் சிறந்த பெறுமதி சேர் ஏற்றுமதியாளருக்கான விருது ஜீ.பீ.டீ சில்வா அன்ட் சன்ஸ் இன்டர்நெசனல் தனியார் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

'இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு நாம் ஆற்றிய அளப்பரியப் பங்களிப்பு கௌரவிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெற்றிக்கு எமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையும் ஒரே நோக்கத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற ஊழியர்களுமே பிரதான காரணங்களாகும். புதிய பொதியிடல் முறை, புத்தாக்கம், பெறுமதி சேர்த்தல், தரம் மற்றும் இதர கைத்தொழில்களுடன் அறிவையும் அனுபவங்களையும் பகிர்தல் ஆகியவற்றை நாம் தொடர்ச்சியாக முன்னெடுகின்றோம்.

இலங்கை வாசனைப் பொருட்களுக்கு சர்வதேச பெறுமதியை வழங்கி அவற்றை சர்வதேச ரீதியாக ஊக்குவித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதற்கு எமது நிறுவனம் தயார்.' தனது வெற்றி குறித்து கருத்துரைத்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லால் டீ சில்வா தெரிவித்தார். மொத்த தேசிய உற்பத்தியின் ஏற்றுமதி துறைக்கு நிறுவனம் வழங்கிய பங்களிப்பு இதன் மூலம் மிகத்ற தெளிவாக பிரதிபலிப்பதாக பணிப்பாளர் நிஹால் டீ சில்வா தெரிவித்தார்.

நீண்ட கால  நோக்குடன் கூடிய தொழில்முயற்சியாளரான ஜீ.பீ.டீ சில்வா 1955 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததோடு 1971 ஆம் ஆண்டளவில் நிறுவனம் உள்நாட்டு சந்தையை வெற்றி கொண்ட அதேவேளை, அதை தொடர்ந்து சிலி நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் தனது ஏற்றுமதி வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்தது.

இன்றளவில் மெக்சிக்கோ, தென் அமெரிக்கா, அமெரிக்கா, பிரித்தானியா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய நாடுகளுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதோடு உலக கறுவா தேவையில் 90மூ ஐ வழங்குகின்றது. அதன் தொழிற்சாலைகள் ரன்தொம்பே மற்றும் பலபிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளதோடு, அவை ஆசியாவின் மிகப் பெரிய கறுவாத் தொழிற்சாலைகளாகக் கருதப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X