Freelancer / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் ஆளுகை, நம்பிக்கை, உறுதித்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், லங்கா ரேட்டிங் ஏஜென்ஸியினால் A- Credit தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுயாதீன தரப்படுத்தலினூடாக, நிறுவனத்தின் உறுதியான நிதிசார் நிலை, வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட-கால உறுதித் தன்மை போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.
காப்புறுதி மாதமான, 2025 செப்டெம்பர் மாதத்தில் ஜனசக்தி லைஃப் தனது 31 வருட கால செயற்பாடுகளை கொண்டாடிய நிலையில், இந்த மைல்கல் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 2025 முதல் காலாண்டு பகுதியில், வேகமான வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனர் எனும் வகையில், தொழிற்துறையின் வளர்ச்சியை விட உயர்வான பெறுபேறுகளை எய்தியிருந்ததுடன், நிகர கட்டுப்பண செலுத்தல்களில் 49% வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது. முதல் அரையாண்டு காலப்பகுதியில், முதல் வருட கட்டுப்பணம், நீண்ட-கால வியாபாரம், நிகர கட்டுப்பண செலுத்தல் மற்றும் புதிய வியாபாரங்கள் போன்ற தொழிற்துறையின் பிரதான கருதுகோள்களில் உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது.
இந்த தரமதிப்பீடு, ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பலமான ஆளுகைக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது, இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளுடன் இணங்குவதை உறுதி செய்கிறது. அனுபவமிக்க தலைமைத்துவக் குழு மற்றும் தெளிவான செயல்முறைகளால் ஆதரிக்கப்படும் அதன் தொழில்முறை நிர்வாக அணுகுமுறை, நிலைபேறான வளர்ச்சியை பின்தொடரும் அதேவேளையில், சவால்களை நிறுவனம் திறம்பட எதிர்கொள்ள உதவுகிறது.
ஜனசக்தி லைஃப் இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “உறுதியான கடன் தரப்படுத்தலினூடாக ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் உறுதியான அடித்தளங்கள் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, உறுதித் தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றில் எமது உறுதியான அர்ப்பணிப்புக்கு கிடைத்த வரவேற்பாக இது அமைந்திருப்பதுடன், எமது காப்புறுதிதாரர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நாம் வழங்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளும் நீண்ட கால அடிப்படையில் அமைந்துள்ளதுடன், அவற்றின் பாதுகாப்புத் தன்மை தொடர்பில் காப்புறுதிதாரர்களுக்கு இந்த கௌரவிப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தகநாமம் எனும் வகையில் எமது பயணத்தின் கொண்டாட்டமாக இந்த மைல்கல் அமைந்திருப்பதுடன், எம்மீது எமது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கைக்கான எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிதி அதிகாரி ஜுட் சண்முகம் கருத்துத் தெரிவிக்கையில், “எமது உறுதியான நிதிசார் முகாமைத்துவ செயன்முறைகள் மற்றும் சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலை தாங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றல் போன்றன இந்த A- தரப்படுத்தலினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான நிறுவனத்தின் ஆற்றல் தொடர்பில் பங்காளர்களின் நம்பிக்கையை வலிமைப்படுத்துவதுடன், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் எமது வழிமுறையை ஆதரிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும், 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜனசக்தி லைஃப் தனது தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்து சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. முதல் ஆண்டுக்கான கட்டுப்பணங்கள் வருடாந்த அடிப்படையில் 61% வளர்ச்சியை பதிவு செய்து, சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் எமது செயலாற்றும் திறனை பிரதிபலித்துள்ளது. வழமையான நீண்ட கால வியாபாரம் 32% இனால் உயர்ந்திருந்ததுடன், நீண்ட-கால வாடிக்கையாளர் பெறுமதியை வலிமைப்படுத்தி, வருமானமீட்டும் வழிமுறைகளையும் உறுதி செய்திருந்தது. நிகர கட்டுப்பண செலுத்தல்கள் (GWP) 27% இனால் உயர்ந்து ரூ. 3,769 மில்லியனாக பதிவாகி, தொழிற்பிரிவின் சிறந்த செயற்பாட்டாளராக நிறுவனத்தை நிலை நிறுத்தியிருந்தது. தேறிய இலாபம் கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 777 மில்லியன் என்பதிலிருந்து 70% இனால் உயர்ந்து ரூ. 1,318 ஆக உயர்ந்திருந்தது. 2025 ஜுன் மாத இறுதியில் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 40 பில்லியனாக உயர்ந்து, நிறுவனத்தின் உறுதியான நிதி இருப்பு மற்றும் வளர்ச்சித்திறன் ஆகியவற்றை மீள உறுதி செய்திருந்தது.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .