2025 ஜூலை 23, புதன்கிழமை

டயர் உற்பத்தியில் 3 பில். ரூபாயை முதலிட சியெட் களனி நிறுவனம் திட்டம்

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியெட் களனி, அதன் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று பில்லியன் ரூபாய்களை இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை - இந்திய கூட்டு முயற்சியுடன் கூடிய டயர் உற்பத்தி முயற்சியில், புதிய உற்பத்தி அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி என்பன பற்றி நம்பிக்கையுடன் இந்த முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.  
உள்ளக நிதி மற்றும் கடன்கள் மூலம் இந்த நிதி உள்வாங்கப்படவுள்ளது.  

களனியில் அதி நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட டிரக் பஸ் ரேடியல்கள் (TBRs) உற்பத்தி நிலையத்தை நிறுவுதல், அதேஇடத்தில் தற்போதுள்ள ரேடியல் டயர் உற்பத்தி வளாகத்தை மேலும் விரிவுபடுத்தல் என்பன புதிய திட்டத்தில் அடங்கும் எனக் கம்பனி அறிவித்துள்ளது.  

“ஐரோப்பாவில் இருந்து ஏற்கெனவே புதிய இயந்திரங்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளன.  2018 ஜுன் மற்றும் ஜுலையில் டிரக் பஸ் ரேடியல் டயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் கிடைத்து விடும். சியெட் களனியின் பயணிகள் கார் ரேடியல் (PCR) உற்பத்தியும் இரட்டிப்பாகிவிடும்.

வான் மற்றும் SUV வாகனங்களுக்காக தற்போது வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் 500,000 டயர்களின் எண்ணிக்கை 850,000 ஆக அதிகரிக்கும். கம்பனியின் தற்போதைய மோட்டார் சைக்கிள் டயர் உற்பத்தி ஆற்றல் வருடாந்தம் 375,000 ஆகும். புதிய முதலீட்டின் பலனாக இதுவும் இரட்டிப்பாகும்” என்று சியெட் களனி ஹோல்டிங்ஸ் தலைவர் சானக்க டி சில்வா கூறினார்.

சியெட் இந்தியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனன்ட் கொயேன்கா, சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் கம்பீர் ஆகியோரும் இந்தக் கூட்டு முயற்சியின் உயர் மட்ட பணிப்பாளர்களும் இந்தப் புதிய முதலீடு குறித்து அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .