2025 மே 19, திங்கட்கிழமை

டொயோடா லங்கா விநியோகஸ்தர் ஒன்றுகூடல்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொயோடா வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான ஏக விநியோகஸ்தரான டொயோடா லங்கா தனது வருடாந்த விநியோகத்தர் மாநாட்டை பண்டாரகம கார்டிங் சேர்கிட்டில் நடத்தியது. டொயோடா லங்காவின் அங்கிகரிக்கபட்ட 235 விநியோகத்தர்களுக்கு வெகுமதியளிக்கும் பொருட்டு, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

 2018/19 நிதி ஆண்டில் விதிவிலக்கான விற்பனை செயல்திறன்கொண்ட விநியோகஸ்தர்கள், டோயோடா லங்காவின் நிர்வாக இயக்குநர் சுங்கோ யோஷியோகா இயக்குநர், தலைமைச் செயற்பாட்டு அதிகாரி மனோஹரா அத்துக்கோரல ஆகியோர்களால் அங்கிகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

உதிரி பாகங்களுக்கான பிரிவு சிறப்பு விருதை Lloyds Automart (Pvt) Ltd பெற்றுக்கொண்ட அதேவேளையில், சேவைகள் மற்றும் உதிரி பாகங்களுக்கான பிரிவின் விருதை Auto World (Private) Ltd பெற்றுக்கொண்டது. வெற்றியாளர்கள் விருதுகளையும் ஐரோப்பியா, ரஷ்யா, வியட்நாம்,  தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான சுற்றுப்பயணங்களுக்கான  வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X