Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 03 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட், நவீன டொயோட்டா Rush SUV வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. தைரியமான சாரதிகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள இந்த் புத்தம்புதிய டொயோட்டா 7 இருக்கை SUV வாகனமானது, வாகன செலுத்துயில் குதூகலமான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த “Rush” வாகனத்தின் வெளியீட்டின் போது, டொயோட்டா நிர்வாக அதிகாரி சுங்கோ யோஷியோகா உரையாற்றுகையில், “இலங்கை சந்தைக்கு இன்னுமொரு உலக தரம் வாய்ந்த வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் டொயோட்டா லங்கா நிறுவனமானது, மகிழ்ச்சியடைகின்றது.
ஆசிய நிலப்பரப்பிற்கும் வெவ்வேறு காலநிலைக்கும் ஏற்ற வகையில் இந்த “Rush” வாகனமானது, கரடுமுரடான வெளிக்கட்டமைப்பையும் மென்மையான உட்புறத்தையும் கொண்டுள்ளது. SUV வாகனங்களுக்கு அதிகரித்து வரும் கோரிக்கையை சந்திக்கும் வகையில் கவர்ச்சிகரமான விலையில் இந்த வாகனமானது, ஆசியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது.துடிப்புடைய இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமான இந்த வாகனமானது, குடும்பங்களின் நம்பகமான தினசரி பாவனைக்கும் உகந்ததாக காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.
உங்களது வாழ்க்கைப்பாணிக்கு பொருந்தும் வகையில் பல்திறப்புலமை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் ஆடம்பரத்துக்கு புகழ்பெற்ற இந்த வாகனமானது, முந்திய பதிப்பு வாகனத்துடன் ஒப்பிடுகையில், புதிய வடிவமைப்பு மற்றும் புத்தம் புதிய உட்கட்டமைப்பு மற்றும் வெளிப்புறக்கட்டமைப்பு என்பனவற்றுடன் காணப்படுகின்றது. சௌகரியம், செயற்றிறன் மற்றும் பல்திறப்புலமை என்பனவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள “Rush” வாகனத்தை கவர்ச்சிகரமான விலையில் பெற்றுக்கொள்ள இயலுமாகவுள்ளது.
“இலங்கை சந்தையானது தற்போது சாதாரண பயணிகள் கார்களிலிருந்து தொலைதூரம் பயணிக்கத்தக்க மற்றும் கவர்ச்சிகரமான விலையிலும் கிடைக்கப்பெறும் SUV வாகனங்களுக்கு மாற்றமடைந்து வருகின்றது. தங்களுடைய வாகனங்கள் குறித்த தெரிவுகளில் மிகவும் கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு “Rush” வாகனமானது, மிகவும் பொருத்தமானதாகும். முழுமையான சாதனங்களை கொண்டிருப்பதுடன் பல்திறமைப்புலமையுடையதாக இந்த SUV காணப்படுகின்றது.
அத்துடன் சிறந்த அறிமுக விலை, 100,000KM/ 3 வருட டொயோட்டா உத்தரவாதம் மற்றும் இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவை என்பனவற்றை கொண்டு வருகின்றது” என்று டோயோட்டா லங்கா நிர்வாகி/முதன்மை இயக்க அதிகாரி மனோகர அத்துக்கோரல குறிப்பிட்டார்.
2018 டொயோட்டா “Rush” வாகனமானது LED ஹெட் மற்றும் டெயில் லாம்ப்ஸ், LED டர்ன் குறிகாட்டிகளுடனான இலத்திரனியல் மூடு கண்ணாடிகள், 17 அங்குல அலோய் வீல்கள், சார்க் பின் அன்டெனா, ஸ்பொய்லர் மற்றும் பல ஏனைய அம்சங்களுடன் வருகின்றது.
திறம்பட பொருத்தப்பட்டுள்ள சுக்கான் இன்போடெயின்மென்ட் அமைப்பை கொண்டுள்ளதுடன் நேர்த்தி மற்றும் வலிமை மிக்கதாக அமைந்துள்ளது. அத்துடன் இவ்வாகனம் 13 கோப்பை தாங்கிகளை கொண்டுள்ளதுடன் பெரிய குடும்பங்கள் பயணிப்பதற்கு ஆர்வமுடைய இளைஞர்கள் என்பவர்களுக்கு பொருத்தமானதாக அமைகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago