2025 ஜூலை 30, புதன்கிழமை

துறைமுக நகரத்துக்கு வரி விலக்கு

Gavitha   / 2016 நவம்பர் 06 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர செயற்‌றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துக்கு வரி விலக்குகளை வழங்குவதற்கு, இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.   

இதன் பிரகாரம், துறைமுக நகர செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனமான CHEC  போர்ட்சிட்டி கொழும்பு, 25 வருட கால வரி விலக்கையும், சீனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி 8 வருட காலப்பகுதியை வரி விலக்களிப்பாக பெற்றுக்கொள்ளவுள்ளன.   

மேலும், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   
எட்டு வருட காலப்பகுதிக்கு இச் செயற்திட்டம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, சுங்கத்தீர்வை, CESS மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இத் திட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, வருமானத்துக்கமைய வரி செலுத்தும் வரியிலிருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 30 பேருக்கு மட்டுமே இந்த வரி விலக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .