2025 ஜூலை 23, புதன்கிழமை

தனியார் துறையில் 5 மில். ஊழியர்கள், 500,000 பதவி வெற்றிடங்கள்

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தனியார் துறையில் 5 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுவதுடன், சுமார் 500,000 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் ஊழியர் தேவைப்பாடு கருத்துக்கணிப்பு 2017இல் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சேவைகள் துறையில் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றுவதுடன், விற்பனை மற்றும் சேவைகள் துறையில் இந்தத் தொகை உயர்வாக அமைந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2017 ஜுன் மாதமளவில் நாட்டில் காணப்பட்ட தனியார்துறை பதவி வெற்றிடங்கள் 497,302 ஆக காணப்பட்டதுடன், இதில் தையல் இயந்திர இயக்குநருக்கான பதவி வெற்றிடம் (77,189) பெருமளவில் காணப்பட்டது.  

பாதுகாப்பு ஊழியர்கள், இதர உற்பத்தித்துறை ஊழியர்கள், கடை விற்பனை அதிகாரிகள், விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள், வணிக மற்றும் விற்பனை பிரதிநிதிகள், சுத்திகரிப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள், ஹோட்டல் துறை ஊழியர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள், இலிகிதர்கள், விற்பனைக்கூடம் மற்றும் சந்தை விற்பனையாளர்களுக்கு அதிகளவு கேள்வி காணப்பட்டது.  

பாதுகாப்பு ஊழியர்களுக்கான பதவி வெற்றிடம் 57,008 ஆகக் காணப்பட்டது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .