2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மாணவர்களின் எதிர்காலத்துக்காக TAMS

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாற்றங்களை எதிர்கொண்டு, தடைகளைத் தாண்டி வளர்ந்து வரும் உலகில், மாணவர்களின் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரதான காரணிகளுள், ஊடகக் கல்வியும் பிரதான பங்கு வகித்து வருகின்றது. இன்று, மனிதனின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக, ஊடகம் காணப்படுகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள், இன்று ஏதோ ஒரு வகையில் கடத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப் போல, வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிகாட்டும் கல்வி பற்றிய தகவல்களும் அவ்வாறே கடத்தப்பட்டுகின்றன. அந்த வகையில், இந்தத் தகவல்களைக் கடத்தும் ஒரு கருவியாகவே ஊடகம் காணப்படுகின்றது.  

இலங்கையில், இவ்வாறான ஊடகக்கல்வியை வழங்குவதற்கு ஒரு சில நிறுவனங்கள் இருந்தாலும், தமிழ் மாணவர்களுக்கு மாத்திரம் ஊடகக்கல்வியை வழங்கும் நிறுவனங்கள் இல்லை என்றே கூறலாம். இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே, Tamils Arts & Media school தற்போது ஆரம்பக்கப்பட்டுள்ளது.  

தங்களை ஒரு பிரபலமான நபராக மாற்றிக்கொள்ள முயலும் இன்றைய தலைமுறைகள், இலத்திரனியல ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் தற்போது ஊடகங்களே வழங்கி வரும் நிலையே காணப்படும் நிலையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊடகங்கள் பாரிய பங்காற்றி வருகின்றன. ஆசிரியர் மய்யக்கல்வி இல்லாதுபோய், இன்று மாணவர் மய்யக் கல்வியே நிகழ்ந்துவரும் நிலையில், தேடிக்கற்றுவரும் மாணவர்களுக்குத் துணையாகவே, இந்த Tamils Arts & Media school ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து, பிரிட்டிஷ் எயார்வேய்ஸில், கடந்த 10 ஆண்டுகளாக சிரேஷ்ட் செயற்பாட்டு முகாமையாளராகப் பணியாற்றிய கார்மேகம் தினேஷ்குமாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி தமிழ் மாணவர்க​ளின் இலட்சியங்களை பூரணப்படுத்தும் ஒரு இடமாகக் காணப்படுகின்றது.   தமிழ் மாணவர்களுக்காக ஏதேனும் ஒரு சேவையை செய்ய வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையில், இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 1 மாத காலத்துக்குள், சுமார் 100 மாணர்கள், இணைந்து கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஊடகம் என்பது தொழில் சார்ந்த விடயம் மாத்திரமல்ல, அது தனித்துவமான ஆளுமை திறனை வெளிக்கொணரும் மேடையாகும் என்பதையே, இந்தக் கல்லூரி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, இந்தக் கல்லூரியின் தலைவர் தினேஷ்குமார் தெரிவித்தார்.  

அத்துடன், பல்வேறு விதமான நோக்கங்களுடன் நிறுவப்பட்டிருக்கும் ஊடக நிறுவனங்களுக்கு, இலாபத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்கு அப்பால், சமுதாயத்தை சரியான திசையில் கொண்டுசெல்லத் தேவையான சிறந்த ஆளுமை விருத்திகளையும் இந்தக் கல்லூரி வழங்குவதாகவும் அவர் கூறினார்.  

நம் சமுதாயத்தில் இன்று உருவாகியிருக்கும் சிறந்த ஊடவியலாளர்கள் பலர் இருந்தும், உலகம் முழுவதும் பறந்து காணப்படும் தமிழ் ஊடகத்துறைக்குத் தேவையான சிறந்த ஆற்றல் மிக்க இளைஞர்களை உருவாக்கும் பயிற்சி நிறுவனங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.   

எதிர்காலத்தில் நல்ல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கி, சமுதாயத்துக்கு நல்ல படைப்புகளை வழங்கவே, தற்கால ஊடக ஜாம்பவான்களின் வழிநடத்தலுடன் இந்தக் கல்லூரி நடத்தப்படுகின்றது.  

இதில், வெகுஜன ஊடகங்களுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஊடக கற்கை நெறியின் உள்ளடக்கங்களாக, சுவாசம், குரல் பயிற்சி, வானொலி செய்திகளைத் தொகுத்து வழங்குதல், விளம்பரப் பின்னணிக் குரல் வழங்குதல், மேடை, ஏனைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், வானொலி தொழில்நுட்பம், மென்பொருள் தொடர்பான பயிற்சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல், தொலைக்காட்சி செய்தி வாசிப்பு, வானொலி நாடக்கலை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னணிக்குரல் வழங்குதல், ஆவணங்களை தொகுத்துவழங்குதல், ஆக்கத்திறன் சிந்தனைகளை வளர்ச்சி செய்தல், மூலோபாய, சந்தைப்படுத்துதல் பற்றிய விரிவுரை ஆகியவை அடங்குகின்றன. அத்துடன், தற்போது ஆளுமை விருத்தி தொடர்பான குறும் பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த அனைத்துப் பாடநெறிகளையும், ஊடகத்துறையின் நிகழ்கால ஜாம்பவான்களே தொகுத்து வழங்குகின்றனர்.  

இந்தப் பயிற்சி நெறிகள் குறித்தான மேலதிக விவரங்களை, இலக்கம் 295, காலி வீதி, வெள்ளவத்தை எனும் முகவரிக்கு பிரவேசித்தோ, 0777320019 எனும்  அலைபேசி இலக்கத்துக்கு தொ​டர்பை ஏற்படுத்தியோ Tamils Arts & Media School -TAMS எனும் பேஸ்புக் மூலமோ தெரிந்துகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .