Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் புதிய தம்புளை கிளை அண்மையில் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இல. 700, அநுராதபுர வீதி, தம்புளை எனும் முகவரியில் இந்தப் புதிய கிளை அமைந்துள்ளது. வங்கியின் முழுமையான சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சகல வசதிகளையும் கொண்டு இந்தக் கிளை அமைந்துள்ளது.
இந்தக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 2018 நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது. இத்துடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக் கிளை வலையமைப்பு 94 பகுதிகளில் பரந்து காணப்படுகின்றன. இந்நிகழ்வில் பெருமளவான வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் புதிய கிளையின் அங்குரார்ப்பணம் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளை வலையமைப்புக்கான சிரேஷ்ட உப தலைவர் ஷெஹான் டேனியல் கருத்துத் தெரிவிக்கையில், “எமது தம்புளை கிளையை அங்குரார்ப்பணம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் பிராந்தியத்துக்கு, எமது வர்த்தகச் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாக, நாம் நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தோம். நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த விவசாய உற்பத்திகளின் வியாபாரம் விநியோக பகுதியாக தம்புளை அமைந்துள்ளது. அத்துடன் சுற்றுலாப் பிரதேசமாகவும் காணப்படுகிறது” என்றார்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியால் பரந்தளவு சேமிப்புத் தெரிவுகள், முதலீட்டுத் திட்டங்கள், நடைமுறைக் கணக்குகள், கடன்கள் போன்றன பிரத்தியேகம், வியாபார தேவைகளுக்காக வழங்கப்படுகின்றன. இதில் இதர நிதிச் சேவைகளும் அடங்கியுள்ளன.
வாடிக்கையாளர்கள் சௌகரியமான வகையில் தமது வங்கி கொடுக்கல் வாங்கல்களை எமது 24/7 நேஷன்ஸ் மொபைல் வங்கியியல், நேஷன்ஸ் ஒன்லைன் வங்கியியல் ஊடாக மேற்கொள்ள முடியும். இவை வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு வரையறைகளற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் டிஜிட்டல் கட்டமைப்புகளாக அமைந்துள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago