2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலை இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்துக்கு டயலொக் உதவி

S.Sekar   / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம், இலங்கை விமானப்படை மற்றும் E-W Information Systems லிமிட்டட் ஆகியனவற்றுடன் இணைந்து திருகோணமலை, கன்னியாவில் அமைந்துள்ள இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் கணினி ஆய்வு கூடத்தை மறுசீரமைத்து மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைக்கு டிஜிட்டல் கல்வி உபகரணங்களை வழங்கியிருந்தது. இந்தத் திட்டம், இலங்கை விமானப்படைத் தளபதி (SLAF) மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரின் வழிநடத்துதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தொழில்நுட்பத்துடன் கூடிய படைப்பாற்றலை கொண்டதான முழுதாக சொருகக்கூடிய Magicbit Pro அலகுகள் மற்றும் உணர்திறன் தொகுதிகளை டயலொக் வழங்கியது. Magicbit என்பது இன்டர்நெட் ஒஃப் திங்ஸ் (loT), ரொபோடிக்ஸ் (Robotics) இலக்ட்ரோனிக்ஸ் (Electronics) மற்றும் புரோகிரேமிங் (Programming) ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு தளம் மற்றும் STEM கருவியாகும். டயலொக், மேலும் நெனச டிவி (Nenasa TV) வசதியையும், முழுதாக கட்டணம் செலுத்தப்பட்ட மாணவர் புரோட்பேண்ட் (Broadband) வசதிகளை வழங்குவதான உறுதிமொழியையும் வழங்கியது.

சீனன்குடா இலங்கை விமானப்படையானது கணினிகளை பழுதுபார்ப்பதற்கு தேவையான அனைத்துவித ஆளணி உதவிகளையும் வழங்கி பங்களிப்புகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. E-W Information Systems லிமிட்டட் நிறுவனம் புத்தம் புதிய டெஸ்க்டொப் (Desktop) கணினிகளை வழங்கிய அதேவேளை, மீதமுள்ள கணினி இயந்திரங்களை மீட்டமைக்க தேவையான சில வன்பொருள்கள் (Hardware) டயலொக் மூலம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தாமோதரம்பிள்ளை சிவானந்தம், "எங்கள் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தகவல் தொடர்பாடல் ஆய்வகம் இருந்தது, ஆனால் அதனை பயன்படுத்தக்கூடியவாறு அதற்கு தேவையான எந்தவொரு உபகரணமும் இருக்கவில்லை. இத்தகைய நிலையிலும், எங்கள் மாணவர்களில் ஒருவர் 2022இல் தொழில்நுட்பவியலுக்கான (ICT) பிராந்திய விருதை வெற்றியீட்டியதை குறிப்பிட விரும்புகின்றேன். மேலும், இந்த புதிய தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் இணைய சேவைகள் மூலம் நமது மாணவர்கள் முழுமையாக பயனடைவார்கள் என நான் மிகவும் நம்புகின்றேன். அதுமட்டுமன்றி, எங்களுக்கு அவசியமான வசதிகள் ஒருசில நாட்களிலேயே வெகு சிறப்பாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையை வழங்கியமைக்காக பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக டயலொக், இலங்கை விமானப்படை மற்றும் E-W Information Systems லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

இந்த உபகாரணங்களானது மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் மத்தியில் நீண்ட ஆண்டுகாலமாக நிலவிவந்த ஒரு தேவையாகும். டயலொக் நிறுவனமானது ஆசிரியர் - மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் தொடர் சேவைகள் மற்றும் இணைப்புகளுக்கான ஆதரவையும் வழங்குவதுடன் இலங்கை விமானப்படை மற்றும் E-W Information Systems லிமிட்டட் உடன் இணைந்து வழங்கப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், உரிய நேரத்தில் கூடுதல் ஆதரவை வழங்கவும் உறுதியளித்துள்ளது. Dialog Enterprise இன் அனுசரணையுடன் திருகோணமலையில் நடைபெற்ற 10வது 'கொமாண்டர்ஸ் கிண்ணம்' கொல்ஃப் (Commanders’ Cup golf) போட்டியுடன் இணைந்ததாக சமகாலத்தில் இந்த மதிப்பான செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .