2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தெற்காசியாவில் முதல் முறையாக ‘மெட்டாவர்ஸ்’ மூலம் Google I/O Extended Sri Lanka 2022

J.A. George   / 2022 மே 31 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம், Ideamart, Innovation Foundry மற்றும் இலங்கையின் Google Developer Group ஆகியவற்றுடன் இணைந்து தெற்காசியாவில் முதல் தடவையாக மெட்டாவர்ஸ் (metaverse)  ஊடாக 'Google I/O Extended Sri Lanka 2022' எனும் நிகழ்வினை மே மாதம் 28 ஆம் திகதியன்று நடத்தியது. இது மே மாதம் 11 ஆம் திகதி முடிவடைந்த சர்வதேச 'Google I/O 2022' செயற்திட்டத்துடன் தொடர்புடைய சமகால நிகழ்வாக இது நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

200,000 பார்வையாளர்களை ஈர்த்திருந்த, மேற்படி தனித்துவமான Google I/O Extended Sri Lanka 2022 நிகழ்ச்சியானது, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும் புதுமையான அறிவு பகிர்வு மற்றும் தொழில்நுட்ப பகிர்வு ஆகிய அனுபவங்களை வழங்கக்கூடியதாக அமைந்திருந்தது.

இதில் பங்கு கொண்டவர்கள் தமது கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்கள் மூலம் தமது வீடுகளில் இருந்தவாறே சௌகரியமாக இந்த 'Google I/O Extended Sri Lanka 2022' இல் இணைந்து கொள்ளக்கூடியதாக இருந்ததுடன், டயலொக் டெலிவிஷன் செனல்1 (Dialog Television Channel 1), டயலொக் உத்தியோகபூர்வ Facebook பக்கம் மற்றும் யூடியூப் (YouTube ) செனலின் ஊடாக இதனை லைவ் ஸ்ட்ரீமிங் (LIVE Streaming) அனுபவமாக பெறும் வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கியது.

தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக நடாத்தப்பட்ட இந்த 'மெட்டாவர்ஸ்' (Metaverse) நிகழ்வை, இலங்கையில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான  தொழில்நுட்ப பிரமுகர் சானுக்ஸ் ப்ரோ மற்றும் அஜ்மால் ஹுசைன் ஆகியோர் தொகுத்து வழங்கிய அதேவேளை, சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள், இனிவரும் நாட்களில் வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு தயார்படுத்தப்படுகின்ற  புதிய உற்பத்திகள் பற்றிய அறிமுகங்களும் செய்யப்பட்டது.

உலகம் பூராவும் உள்ள மென்பொருள் விருத்தியாளர்களுடன் இணைந்து (Software Developers) தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றும்  நடாத்தப்பட்டது. Google நிறுவனத்தின் நிபுணர்களுடன் நடைமுறை ரீதியிலான புதிய ஆய்வுகள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், இதன்போது டயலொக் நிறுவனத்தினால் அதன் 5G க்கான உயர் தொழில்நுட்ப தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதற்கமைய , Digital Twin, Robot Arm, 360 Video மற்றும் Hologram உட்பட இன்னும் பலதும் இவ்வாறு '5G இன்னோவேஷன் சென்டர்' களினூடே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், டயலொக்கின் Intelligent Video Content Analysis (IVCA) எனப்படும் நுண்ணறிவு வீடியோ உள்ளடக்க பகுப்பாய்வு சேவைகள் உட்பட பல புதுமைகளையும் பார்வையாளர்கள் இதன்போது காணும் வாய்ப்பையும் பெற்றனர். இவைமட்டுமன்றி, 777 NFTகள், ஸ்மார்ட் சாதனங்கள், Star Points மற்றும் Google I/O Extended Sri Lanka 2022 ஐ அடையாளப்படுத்தும் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான டி-ஷர்ட்கள் ஆகியனவற்றை வெற்றி கொள்ளும் வாய்ப்பும்  பங்கேற்பாளர்களுக்கு கிட்டியது.

இந்நிகழ்வு குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “புதுமைகளின் செம்பியன் என்ற வகையில், மே 28 ஆம் திகதி மெட்டாவர்ஸ் (Metawares) ஊடாக எமது உள்ளூர் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்க கிடைத்தமையையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். 

இலங்கையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் தொழில்நுட்ப நடத்துனர்கள் என்ற ரீதியிலும், இலங்கையில் ஐந்தாவது தடவையாகவும் Google I/O Extended Sri Lanka 2022 நிகழ்வை ஒருங்கமைத்த நிறுவனம் என்ற ரீதியிலும் இந்த திட்டத்தின் மூலம் நமது உள்ளூர் தொழில்நுட்ப அறிவுக்கும் உலகளாவிய அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே எங்கள் நோக்கமாகும். அதற்கமைய, இதில் பங்கேற்கும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஆகியோருக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் அதனூடே உருவாகும் கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்து கொள்ளச் செய்வதற்கும், அவ்வாறே ஏனைய தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மென்பொருள் உருவாக்குனர்களுடனான உறவுகளை வளர்த்துக் கொள்ளச் செய்வதற்கும் சிறந்த வாய்ப்பினை எங்களால் வழங்க முடிந்துள்ளமையையிட்டு  நாங்கள் மகிழ்ச்சி கொள்கின்றோம்." என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X