2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேசிய காப்புறுதி தினக் கொண்டாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய காப்புறுதி தின நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் இலங்கையின் காப்புறுதித் துறையினர் செப்டெம்பர் முதலாம் திகதி ஒன்று சேர்ந்திருந்தனர்.

அவர்களின் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இலங்கை காப்புறுதிச் சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது.

இந்தச் செயற்பாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியதாக, 07 முக்கிய இடங்களில் இடம்பெற்றன. நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த அனைத்துப் பிரஜைகளும் இது தொடர்பான அறிவைப் பெறுவது இதன் நோக்கமாகும்.  

இந்த நடவடிக்கை, கொழும்பு, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் SLIC, HNB அசூரன்ஸ், யூனியன் அஷுரன்ஸ், ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, AIA இன்ஷுவரன்ஸ் மற்றும் Fairfirst இன்சூரன்ஸ், அலியான்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றினால் முறையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு நிறுவனத்தினாலும், நூற்றுக்கணக்கான காப்புறுதி ஆலோசகர்கள் இந்த இடங்களில் ஒன்றிணைந்து தேசிய காப்புறுதி தினத்தைக் கூட்டாகக் கொண்டாடினர்.   

செப்டெம்பர் முதலாம் திகதி தேசிய காப்புறுதி தினமாக, கடந்த வருடம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

இது காப்புறுதித்துறை அடைந்துள்ள மாபெரும் மைற்கல்லாகும். இலங்கை மக்களிடையே காப்புறுதியின் பெறுமதியை அறிவுறுத்தி, பெருந்தொகையான மக்களுக்கு, குறைந்தபட்சம் சாதாரண காப்புறுதி ஒன்றையாவது பெற்று அவர்களதும், அவர்களின் அன்புக்குரியோரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தேசிய காப்புறுதி தினத்தின் பிரதான நோக்கமாகும்.

திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவோருக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய நிவாரண சுமையை குறைப்பது இந்த நடவடிக்கையின் மற்றுமொரு நோக்கமாகும். 

இதன் மூலம் அரசாங்கத்தின் நலனுக்காகவும், மக்களின் நன்மை கருதியும் செயற்படும் வாய்ப்பு காப்புறுதி நிறுவனங்களுக்குக் கிடைக்கிறது. காப்புறுதி துறையினால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பையும் இதன் மூலம் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X