2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தேசிய சுப்பர் லீக்’ 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் அனுசரணை

J.A. George   / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனர்களான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி நிறுவனமானது  இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியை தெரிவு செய்யும் நோக்கிலான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  'நெஷனல் சுப்பர் லீக்' 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரின் பிரதான அனுசரணையாளர்களாக செயற்படவுள்ளது.  இப்போட்டித் தொடரானது ஜனவரி 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேற்படி 'டயலொக் - SLC தேசிய சுப்பர் லீக்' போட்டித் தொடரானது Dialog Television Channel 140 மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ 'யூடியூப்' செனல் ஆகியவற்றில் நேரடியாக கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் மிகவும் சிறந்த 100 கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பில் நடைபெறுகின்ற இந்த போட்டித்தொடரில் கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் தம்புள்ளை ஆகிய 5 அணிகள் போட்டியிடவுள்ளதுடன்  அதற்கமைய,  கண்டி அணியின் தலைவராக கமிந்து மென்டிஸ்,  கொழும்பு அணியின் தலைவராக தசுன் ஷானக்க, யாழ்ப்பாணம் அணியின் தலைவராக தனஞ்சய சில்வா, காலி அணியின் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ், தம்புள்ளை அணியின் தலைவராக அஷான் பிரியன்ஜன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.                    

 மேற்படி 'டயலொக் - SLC தேசிய சுப்பர் லீக்' போட்டிகளில் அனைத்து அணிகளும் முதல் சுற்றில் 8 போட்டிகளில் போட்டியிடும். இதில் கூடிய புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் இரண்டு அணிகள் பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கமைய நடைபெறுகின்ற இந்த போட்டித்தொடரில் நாளொன்றுக்கு இரண்டு போட்டிகள் வீதம் இடம்பெறும்.

அதற்கமைய, இதன் ஆரம்ப போட்டிகளாக காலி மற்றும் கொழும்பு அணிகள்  கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்திலும், தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் அணிகள் கொழும்பு பி.சரா ஓவல்  மைதானத்திலும் ஜனவரி 24 ஆம் திகதி போட்டியிடுகின்றன. ஆரம்ப போட்டியானது குறித்த மைதானங்களில்  காலை 9.45 மணிக்கு இடம்பெறும்.

 இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகவும்  செயலாற்றுகின்ற டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம், 'தேசிய சுப்பர் லீக்' கிரிக்கெட் போட்டிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பிரதான அனுசரணையை  வழங்குகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா அவர்கள், “இந்நாட்களில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி ஆகியன சர்வதேச அரங்கில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. இத்தகைய பின்னணியில், உள்ளூர் கிரிக்கெட் களத்தில் உயர்ரக போட்டியாக கருதப்படுகின்ற 'நெஷனல்  சூப்பர் லீக்', போட்டியானது மேலும் பல திறமையான வீரர்களை கண்டறிந்து, அவர்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும்'' என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,"நெஷனல் சுப்பர் லீக்"கின் பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆசி ஆட்டா காட்டுகின்ற ஈடுபாட்டை  மனப்பூர்வமாக வரவேற்பதுடன், விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்ற அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிப்பதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்கின்றேன்" என்றார்.

டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்தின், வர்த்தக நாமம் மற்றும் ஊடகம் - குழு சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின்  உத்தியோகபூர்வ அனுசரணையாளர்கள் என்ற ரீதியில் டயலொக் நிறுவனமானது 'நெஷனல் சுப்பர் லீக்' போட்டித் தொடருக்கும் பிரதான அனுசரணையாளர்களாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம், அடுத்து இடம்பெறவுள்ள போட்டிகளையிட்டு  இலங்கை தேசிய அணிக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கு இந்த 'சுப்பர் லீக்' போட்டியானது உதவிகரமாக அமையும். எனவே, 'தேசிய சுப்பர் லீக்' போட்டிகள் வெற்றிகரமாக அமைவதற்கு வாழ்துகின்றேன்" என்றார்.

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட் தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், வலைப்பந்து மற்றும் கரைப்பந்து அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாகவும் செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறே, ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம் , ஜூனியர் கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி லீக், நொக்கவுட் மற்றும் அணிக்கு ஏழு பேரைக்கொண்ட ரக்பி செவன்ஸ் போட்டிகள், பிரீமியர் கால்பந்து, பாடசாலை கிரிக்கெட் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா  விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி போட்டியாளர்களுக்கு வலுசேர்க்கும் விதமாக நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .