2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய விற்பனை காங்கிரஸ் 2020 விருதுகளில் செலான் வங்கிக்கு கௌரவம்

S.Sekar   / 2022 ஜூன் 13 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் 2020 நிகழ்வில், ஒரு தங்கம், இரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல விருதுகளை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த விருதுகளை சுவீகரித்திருந்தமையினூடாக, செலான் வங்கியின் விற்பனைப் பயணத்துக்கு மேலும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டின் விற்பனை நிபுணர்களின் அயராத முயற்சி மற்றும் அவர்களின் வினைத்திறனான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நன்மதிப்பைப் பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வாக SLIM NASCO விருதுகள் அமைந்திருப்பதுடன், 21ஆம் ஆண்டாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கலினூடாக, நாட்டின் சிறந்த விற்பனைப் பிரதிநிதிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கையின் சிறந்த விற்பனை நிபுணர்கள் எனும் இலச்சினையை அணிவதற்கு ஆர்வத்துடன் எதிர்பார்ப்போருக்கு கைகொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன செலான் வங்கியின் வெற்றியீட்டிய விற்பனை செயலணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன், கருத்துத் தெரிவிக்கையில், “NASCO விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியிருந்த செலான் வங்கி அங்கத்தவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் வளர்ச்சி காண்பதையிட்டு நான் பெருமை கொள்வதுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தமது அதீத ஈடுபாட்டை பின்பற்றுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததையிட்டு உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன். சிறந்த சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் விருதுகள் அமைந்துள்ளன என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்கால கூட்டாண்மை தலைவர்களின் உருவாக்கத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.

பெறுமதிகளுக்கு முன்னுரிமை வழங்காமல், அணி அங்கத்தவர்களுக்கு அறிவூட்டி, தம்மை வளர்த்துக் கொள்ளக்கூடிய கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் செலான் வங்கி கவனம் செலுத்துகின்றது. கடந்த நான்கு SLIM NASCO விருதுகள் வழங்கல் நிகழ்வுகளிலும் வங்கி மொத்தமாக பெற்றுக் கொண்ட 19 விருதுகளினூடாக, இலங்கையின் வங்கியியல் துறையில் சிறந்த விற்பனை அணிகளைக் கட்டியெழுப்புவதில் நீண்ட காலமாக காண்பித்து வரும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

செலான் வங்கியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியில், நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் சேவை என்பது மையமாக அமைந்துள்ளது. எமது விற்பனை அணியினர் இதனை கவனத்தில் கொண்டு, வாடிக்கையாளர் சௌகரியம் என்பதற்கு முன்னுரிமையளித்து செயலாற்றுகின்றனர். அதனூடாக வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களின் வாயிலுக்கு கொண்டு செல்கின்றனர். முன்னேறுவதற்கான அவர்களின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன இந்த விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. அவர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படுகின்றமையை காண்பது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளதுடன், வங்கியியல் துறையில் விற்பனையை தொழில்நிலையாக தெரிவு செய்திருந்தமையின் பயனை அவர்களால் அனுபவிக்க முடிந்துள்ளது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X