2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேயிலை தொடர்பில் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் உன்னிப்பான அவதானிப்பு

S.Sekar   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் இலங்கை தேயிலை உற்பத்தி திருப்திகரமானதாக அமைந்துள்ளதாகவும், சாதாரணமாக காலநிலை மாற்றம் காரணமாக செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் வீழ்ச்சி பதிவாவதாக இந்த இரு மாதங்களில் தேயிலை உற்பத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி. ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஜுலை மாதத்தில் 26 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சராசரி பெறுமதியுடன் ஒப்பிடுகையில் உயர்வானதாகும். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி இல்லை என அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், வரட்சியான காலநிலை காரணமாக செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவது வழமை. இந்த இரு மாதங்களின் போக்கை நாம் உன்னிப்பாக அவதானிப்போம். முதல் ஆறு மாதங்களில் இலங்கை 162 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்திருந்தது. இது வழமையான சராசரியை விட உயர்வானதாகும் என்றார்.

சேதன உர தயாரிப்புக்கான மாற்று வழிகளை நாம் இனங்கண்டு வருவதுடன், தேயிலை உற்பத்திக்கும் விவசாயத்துறைக்கும் அவசியமான போஷாக்கை பெற்றுக் கொடுப்பதற்கு சில போஷணைப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். இந்திய மற்றும் கென்ய தேயிலையுடன் ஒப்பிடுகையில் இலங்கை தேயிலை கிலோகிராம் ஒன்று 4-4.5 அமெரிக்க டொலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .